பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
11:04
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கோபுரம் பாலாயனம் செய்வதற்கான யாகபூஜை துவங்கியது. பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதையொட்டி கடந்த ஆண்டு ஆவணி மாதம் திருப்பணிகள் துவங்கியது. இதில் திருக்குளம், ஆழ்வார் மண்டப பணி, வாகன கட்டடம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, குழாய் பணிகள் முடிவடைந்துள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட விமானங்கள் பணிகள் துவங்க உள்ளது. இதற்கான பாலாயன யாக பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு பிரார்த்தனை, புனித நீர் மந்திரித்தல், விதையிடு விழா, விமானங்களில் இருந்து கலாதரிசனம், ஹோமம் நடந்து. தொடர்ந்து 12:00 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், 7:00 சர்வஜெய அர்ச்சனை, ஹோமங்கள் நடந்து இரவு 8:30 மணிக்கு 2ம் கால பூர்ணாகுதி நடந்தது. நேற்று (22ம் தேதி) காலை 4:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் கோபூஜை, சுப்ரபாரதம், விசேஷ ஹோமங்கள், மீன லக்னத்தில் பாலாலய பிரதிஷ்டை நடந்தது.