பரமக்குடி திரிலிங்க சச்சிதானந்த சுவாமிகள் 75 வது குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2026 10:01
பரமக்குடி; பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் மரக்காயர்பட்டணம் பகுதியில் சீதாராம சுவாமிகள் ஞான யோகானந்த ஆசிரமம் உள்ளது. இங்கு உள்ள ராஜகணபதிக்கு 37ம் ஆண்டு அபிஷேகம் மற்றும் திரிலிங்க சச்சிதானந்த சுவாமிகளின் 75ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இங்கு நந்தி மற்றும் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இங்கு ராஜ கணபதி மற்றும் சீதாராம சுவாமிகளின் சிஷ்யர்கள் சேஷ சுவாமிகள் மற்றும் சுந்தரராஜ சுவாமிகள் உள்ளிட்ட மகான்களுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் செய்தனர்.