பதிவு செய்த நாள்
22
மார்
2016
06:03
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி தேர் திருவிழா நடந்தது. காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து ரிஷபகொடி ஏற்றப்பட்டது. பின் விநாயகர், சுப்ரமணியர், கயிலாசநாதர், சுந்தாம்பாள், சண்டிகேஸ்வர், அஸ்திரதேவர் புறப்பாடு நடந்தது. பின் நவசந்தி,யாக பூஜை தீபாரதனை நடந்தது. கடந்த 15ம் தேதி பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் முடிந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலம், கயிலாசநாதர் சூரிய பிரபை, சுந்தராம்பாள் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது. நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று தேர் திருவிழா நடைபெற்றது.இதில் கலெக்டர் கரிகாலன், துணை மாவட்ட ஆட்சியர் தினேஷ்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் தேர்திருவிழாவை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின் தேர் பாரதியார்சாலை,கென்னடியார் வீதி,மாதாகோவில் வீதி வழியாக நிலையை வந்தடைந்தது.