Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்சுழி போட்டு செயல் எதுவும் ... விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
முதல் பக்கம் » சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு!
ஆறு படைவீடு கொண்ட விநாயகர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2011
12:08

முதல் படைவீடு திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு, அல்லல் போக்கும்  விநாயகர்வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின்  துன்பத்தைக் களைவதில் இவர் நிகரற்றவராகத் திகழ்கிறார். இரண்டாம் படைவீடு விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில். காசிக்குச் சமமாகத் திகழும் இக்கோயிலில்  ஆழத்துப் பிள்ளையார் என்ற பெயரில் இவர் காட்சி தருகிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி இவரைத் தரிசனம் செய்ய வேண்டும். காளஹஸ்தியிலும் இவ்வாறு ஒரு சன்னதி உள்ளது. தனியாக கொடிமரம் இவருக்கு அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல், வாழ்வில் மேன்மைகளைத் தந்தருள்பவர் இப்பெருமான். மூன்றாவது படைவீடு திருக்கடையூர் அபிராமி கோயில். இங்குள்ள கள்ளவாரண பிள்ளையார் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் தருபவர். அபிராமிப்பட்டர் அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சித்தி விநாயகராக தன்னை நாடி வருபவர்களுக்கு வாழ்வில் சித்தியை (வெற்றியை) அருளும் வள்ளலாக விளங்குகிறார். அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் உள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் இவர் உள்ளார். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப அளவில் சிறியவர் என்றாலும் சக்தி வாய்ந்தவராக உள்ளார். பிற்காலத்தில் முக்குறுணிப் பிள்ளையார் சந்நிதி உருவானதும் இவரது சந்நிதியில் வழிபாடு குறைந்துவிட்டது. மாணிக்கவாசகர், பாண்டியநாட்டு படைக்காக குதிரை வாங்கச் செல்லும்போது இவரை வழிபாடு செய்துவிட்டே கிளம்பினார். ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பிடம் பெறுகிறார். சிவலிங்கத்தை வலக்கையில் தாங்கி, சிவபூஜை செய்யும் நிலையில் இப்பெருமான் கேட்ட வரம் தரும் கற்பகவிருட்சமாகத் திகழ்கிறார்.  ஆறாம் படைவீடு பொள்ளாப்பிள்ளையார் கோயில் கொண்டிருக்கும் திருநாரையூர் (கடலூர் மாவட்டம்) ஆகும். பொள்ளுதல் என்றால் செதுக்குதல். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்புமூர்த்தியாவார். காலப்போக்கில் இப்பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என்று மாறிவிட்டது.

இவருக்கும் நவராத்திரி: புரட்டாசியில் அம்மன் கோயில்களில் கொலுவைத்து கொண்டாடும் நவராத்திரி விரதம் போன்று விநாயகருக்கும் நவராத்திரி விரதம் உண்டு. இவ்விரதம், விநாயகர்சதுர்த்தியைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படும். ஒன்பது நாட்களும் விரதம் இருந்து விநாயகரை பூஜிக்க வேண்டும். அவரவர் நிலைக்கேற்ப வழிபாடு செய்துகொள்ளலாம். சாணம், களிமண், மஞ்சள், வெல்லம், சந்தனம், அரிசிமா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பிடித்து விநாயகரை வழிபடலாம். இதனையே பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று சொலவடையாகக் கூறுவர்.

முக்கனிகளும், கரும்பும் ஆகிய நான்கையும் நான்கு கரங்களில் ஏந்தி, ஐந்தாவது கையில் மோதகத்தை வைத்துக் கொண்டு இருப்பவர் பாலகணபதியாவார். சோடச விநாயகர் என்னும் பதினாறு விநாயகர்களில் இவரே முதலாமவர். திங்கட்கிழமை வரும் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டால் குழப்பம் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். புதனன்று வரும் சதுர்த்தியில் வழிபட்டால் கல்வித்தடை நீங்கும். வெள்ளியன்று சதுர்த்தி வழிபாடு செய்ய காரிய விக்னம் நீங்குவதோடு பாவம் அகலும்.  யானைமுகம் இல்லாமல் மனிதமுகத்தோடு இருக்கும் நரமுக கணபதி பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள  சிதலைப்பதியில் கோயில் கொண்டிருக்கிறார். விநாயகருக்கு யானைமுகம் வருவதற்கு முன் இருந்த நிலையில் இங்கு அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானுக்கு வள்ளியை திருமணம் செய்வதில் துணைபுரிந்தவர் விநாயகரே. இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே என்று பாடியுள்ளார். விநாயகப்பெருமானை முழுமுதல் கடவுளாகப் போற்றும் முறைக்கு காணாபத்யம் என்று பெயர். இதன்படி, விநாயகரே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துதொழில்களை நடத்தி பிரபஞ்ச இயக்கத்தை நடத்துவதாகச் சொல்வர்.  பரம்பொருள் பெரியவராக இருந்தாலும் அவரைத் தாங்கும் சக்தி நம் இதயத்திற்கு உண்டு என்பதைக் காட்டுவதற்காகவே பெரிய உருவம் கொண்ட விநாயகப்பெருமானுக்கு சிறிய மூஞ்சுறுவை வாகனமாக அமைத்தனர். விநாயகரை வழிபட்டால் பலன் உடனடியாகக் கிடைக்கும் என்பர். குழந்தைக் கடவுள் என்பதால், வேண்டும் வரத்தை அருள்வதில் ஈடுஇணையற்றவர். கணபதிபூஜை கைமேல் பலன் என்று இதனைச் சொல்வதுண்டு.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி உக்ரதேவதையாக விளங்கியபோது, ஆதிசங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அவ்விநாயகருக்கு உக்கிரம் தணித்த விநாயகர் என்றே பெயர். இவரை வழிபட மனசாந்தி கிடைக்கும். நடனக்கலையில் வல்லவராக சிவபெருமான் விளங்குகிறார். அவருடைய பிள்ளையான விநாயகரும் நாட்டியம் ஆடுவதில் விருப்பம் கொண்டவர். இந்த நர்த்தனவிநாயகரை வழிபட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஜப்பானில் விநாயகர் காங்கி டெக் என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து காட்சி தருகிறார். அங்கு இவருக்கு கவான்வின் ஷேர் விநாயக்ஷா என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். யோகப்பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழிபடுவர். மூலாதாரமாக ஆதிக்கு காரணமாக இருப்பவர் விநாயகப்பெருமான். எதையும் மங்களகரமாக முடித்து வைப்பவர் ஆஞ்சநேயர். இவ்விருவரும் இணைந்த கோலமே ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் தொடங்கும் செயல்கள் மங்கலமாய் நிறைவேறும். இலங்கை கதிர்காமத்தில் விநாயகப்பெருமான் முறிவண்டி விநாயகர் என்ற பெயருடன் திகழ்கிறார். இவரை வழிபடாவிட்டால், வாகனத்தின் அச்சு முறிந்துவிடும் என்று நம்புகின்றனர். வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இவ்விநாயகரை வழிபட்டுச்செல்வர்.

 
மேலும் சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு! »
temple news
மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச ... மேலும்
 
temple news
பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று தெரியும். ஆனால், இவரை பிள்ளை யார் ... மேலும்
 
temple news
மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம் உண்டு. ஆவணியில் பிள்ளையார் ... மேலும்
 
temple news
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar