Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: (கார்த்திகை, 2,3,4. மிருக சிரிஷம் 1,2) 75/100 ரிஷபம்: (கார்த்திகை, 2,3,4. மிருக சிரிஷம் ... கடகம்: (புணர்பூசம் 4, பூசம் ஆயில்யம் 1) 65/100 கடகம்: (புணர்பூசம் 4, பூசம் ஆயில்யம் 1) ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2018 முதல் 13.4.2019 வரை)
மிதுனம்: (மிருகசிரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) 70/100
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2017
15:39

புத்தி கூர்மையுடன் பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

பணமழை பொழியும்! பொன், பொருள் சேரும்

ஆண்டின்  தொடக்கத்தில்  4-ம் இடமான கன்னி ராசியில் உள்ள குரு, செப்.1ல்  துலாம் ராசிக்கு மாறுகிறார். அதன் பின்  2018 பிப்.13ல்  விருச்சிக ராசிக்கு மாறுகிறார். ராசிக்கு 3ல் உள்ள ராகு   ஜூலை 26ல்  2-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். கேது 9-ம் இடமான கும்பத்தில் இருந்து  ஜூலை 26ல்  8-ம் இடத்திற்குச் செல்கிறார். ராசிக்கு 6ல் இடமான விருச்சிகத்தில் உள்ள சனிபகவான் டிச. 18ல்  தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் அடிப்படையில் பலனைக் காணலாம்.             

ஏப்ரல் 14- – ஜூலை 31
            
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு நிலைக்கும். சுப விஷயத்தில் விடாமுயற்சி தேவைப்படும். சமூகத்தில் மதிப்பு  சுமாராக இருக்கும். உறவினர்கள் வகையில்  கருத்துவேறுபாடு உருவாகலாம். சனிபகவானின் 10ம் இடப்பார்வையால் மழை போல பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.  பணியாளர்கள் வேலைப்பளுவைச் சந்திப்பர்.  அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.  கலைஞர்கள் தீவிர முயற்சியால் புதிய ஒப்பந்தம் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் போதிய மகசூலை பெறுவர். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.             

ஆகஸ்ட்- 1  – 2018 ஜனவரி 31

குருபகவான் 5ம் இடத்தில் இருப்பதால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தேறும். அதிர்ஷ்டவசமாக பொருளாதார வளம் பெருகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதுமண தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.      பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.  அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் பெருகும். பங்குதாரர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம்  கிடைக்கும். சக பெண் கலைஞர்களின் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி  வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். விவசாயத்தில் உழைப்புக்கேற்ப மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு ஆதாயம் வரும். வழக்கு, விவகாரத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  உஷ்ணம், தோல், தொடர்பான நோய்
ஏற்படலாம்.              

2018 பிப்ரவரி-1 – ஏப்ரல்13

குடும்ப பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுபவிஷயத்தில்  தடை குறுக்கிடலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது. தொழிலில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் பெறுவர். அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனடைவர்.  வழக்கு, விவகாரம் சுமாராக இருக்கும்.  பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர்.  

பரிகாரம்: சனிக்கிழமை நவக்கிரக வழிபாடு. ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு. செல்ல வேண்டிய கோவில் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி.

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2018 முதல் 13.4.2019 வரை) »
temple
நல்ல எண்ணத்துடன்  செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

ராசிக்கு 7-ம் இடமான துலாம் ராசியில் குருபகவான் ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

ராகு நன்மை தரும் நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் மிதுன ராசி அன்பர்களே!  

குரு சாதகமாக இருக்கும் நிலையில் தமிழ் ... மேலும்
 
temple
பகைவரிடமும் கண்ணியமுடன் நடக்கும் கடக ராசி அன்பர்களே!

ராசிக்கு  4-ம் இடமான துலாம் ராசியில் ... மேலும்
 
temple
நினைத்ததை முடிக்கும் வல்லமை பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!

கேது சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.