Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
கடகம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025.. நல்லகாலம் வந்தாச்சு
எழுத்தின் அளவு:
கடகம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025.. நல்லகாலம் வந்தாச்சு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
01:04

புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சு

தனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் முதல் 3 பாதங்களில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு வித்யாகாரகன் புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு (கடகம்) மனக்காரகனான சந்திரன் ராசி நாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் குரோதி ஆண்டில் புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றியும், எதிர்பார்த்த வருமானமும் கிடைக்கும். எதிரி தொல்லை விலகும். வெளிநாடு செல்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். விரும்பிய யாவும் வந்து சேரும். தகுதிக்கேற்ற பொறுப்பு, பதவி உயர்வு ஏற்படும். பிறரால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள்.

சனி சஞ்சாரம்
கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி, தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட பலன் தருவார். தொட்டதெல்லாம் வெற்றி, முயற்சியெல்லாம் லாபம் என்ற நிலை உண்டாகும். விருப்பம் நிறைவேறும். 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி கைகூடும்.  புதிய தொழில் மூலம் லாபம் காண்பீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 4ம் பாதத்தினருக்கு 2024, ஜூன் 19 - நவ. 4 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29  அஸ்தமன காலத்திலும் நெருக்கடி விலகும். ஆரோக்கியம் சீராகும்.  வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.

ராகு, கேது சஞ்சாரம்
 ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரம் லாபகரமாக இருக்கும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். துணிச்சலுடன் செயல்படும் நிலை உண்டாகும். சகோதரர், பணியாளர்கள் ஒத்துழைப்பர்.  

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப குருவால்  வருமானம் உயரும். முன்னேற்றம் ஏற்படும். மே 1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு கூடும். அலைச்சல் உண்டாகும். கடன் அதிகரிக்கும். ஆனால் உடல்நிலை சீராகும். வம்பு, வழக்குகள் தீரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொழிலில் மந்தநிலை ஏற்படும். வருமானத்தில் தடை, பணியில் பிரச்னை உருவாகும்.  மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு கூடும். செல்வாக்கு உயரும். தொழில், குடும்பம், உத்தியோகத்தில் யோகமும் அளிப்பார். திருமண யோகம், குழந்தை பாக்கியத்தை தருவார். வேலைக்காக முயற்சித்தவர்கள் நல்ல வேலைவாய்ப்பு பெறுவர்.

சூரிய சஞ்சாரம்
புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2024, ஏப்.14 - மே13, ஆக.17 - செப். 16, நவ. 16 - டிச. 15, 2025 மார்ச் 15 - ஏப்.13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2024, ஏப்.14 - ஜூன் 14, செப்.17 - அக்.17, டிச. 16 - 2025, ஜன. 15 காலத்திலும் செல்வாக்கை உயர்த்துவார். தனித்திறனை வெளிப்படுத்துவார். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியருக்கு விரும்பிய இடமாற்றம், பணி உயர்வு கிடைக்கும்.


பொதுப்பலன்
நெருக்கடி நீங்கும். முயற்சியில் வெற்றி, கடன் பிரச்னை தீரும். வேலையில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். இழுபறி வழக்குகள் சாதகமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில்
மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள், ஏற்றுமதி, இறக்குமதி, திரைப்படம், சின்னத்திரை, இயந்திரத் தொழிற்சாலை, வியாபார நிறுவனம், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், பத்திர எழுத்தாளர், கதாசிரியர்கள், பத்திரிகையாளர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

பணியாளர்கள்
திறமைக்கு மதிப்பில்லை, என்ன தான் உழைத்தாலும் உயர்வில்லை என வருத்தப்பட்டு வந்த நிலை இனி மாறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும்.

பெண்கள்
வேலைக்காக முயற்சித்தவர்களின் செயல் வெற்றியாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல் பாதிப்புகள் விலகும். கணவர், குடும்பத்தினரின் பாராட்டை பெறுவீர்கள். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். உயர்கல்வி கனவு நிறைவேறும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளி நாட்டுக்குச் செல்வர்.

உடல்நிலை
உடல்பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். விபத்து, நோய் என படுக்கையில் இருந்தவர்கள் சிகிச்சையால் எழுந்து நடமாடத் தொடங்குவர். சிலருக்கு மூச்சுத்திணறல், நரம்புப் பிரச்னை ஏற்பட்டு குணமாகும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். சொத்து சேர்க்கை உண்டாகும்.சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளின் திருமணத்தை நடத்துவீர்கள். புதிய வாகனம், வீடு என நீண்டநாள் கனவு நிறைவேறும். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர்.

பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவனை தரிசிக்க நல்வாழ்வு அமையும்.


பூசம்: பணவரவு அதிகரிக்கும்

ஆயுள்காரகனான சனி, மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கப்போகும் குரோதி வருடத்தில் நினைத்தது நிறைவேறும். முயற்சி வெற்றி பெறும்.  எதிர்ப்பு விலகும். உடல் பாதிப்புகள் நீங்கும். தனித்தன்மை வெளிப்படும். வாழ்வு உயரும். பொருளாதார சங்கடம் விலகும். சிலருக்கு வெளியூர் சென்று வசிக்கும் நிலை ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.

சனி சஞ்சாரம்
சனி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக இருப்பதால் உடலில் சங்கடங்கள் தோன்றும். சிலருக்கு  விபத்து உண்டாகும் என்றாலும், 2024, ஜூன் 19 - நவ. 4 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன காலத்திலும் அஷ்டமச் சனியின் பாதிப்பு இருக்காது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும். பிரச்னைகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட பலனை பெறுவீர்கள்.

ராகு, கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் 9 ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், 3ம் இடமான தைரிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் சங்கடங்கள் காணாமல் போகும். தேவையான பணம் வரும். வியாபாரம், வேலை காரணமாக வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். வேலைத் தேடியவர்களுக்கு முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 10ம் இட குருவால் பணியில் பிரச்னை, விரும்பாத இடமாற்றம், தொழில், வியாபாரத்தில் தடை, பொருளாதார நெருக்கடி தோன்றும். மே 1 முதல் லாப ஸ்தான குருவால் இழந்த செல்வாக்கு பெறுவீர்கள். பதவி உயர்வு ஏற்படும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி, திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்கியம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தடைகள் விலகி முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.

சூரிய சஞ்சாரம்
2024, ஏப்.14 -  ஜூன் 14, செப். 17 - அக். 17, டிச. 16 - 2025, ஜன. 15 காலங்களில் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வாழ்வில் உண்டான நெருக்கடிகள் விலகும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும்.  புதிய தொழில் தொடங்க அரசு அனுமதி கிடைக்கும்.

பொதுப்பலன்
குரோதி ஆண்டில் 3ம் இட கேது, மே 1 முதல் 11 ம் இட குரு, 120 நாட்கள் சூரியன், 45 நாட்கள் செவ்வாயால் உங்கள் வாழ்க்கை வளமாகும். நெருக்கடிகள் விலகும். அந்தஸ்து உயரும். பொருளாதாரம் மேம்படும். புதிய சொத்து சேரும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வேலைக்காக முயற்சித்தவர்களின் கனவு நனவாகும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

தொழில்
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய முதலீடு லாபம் தரும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். இயந்திரத் தொழிலில் லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஆதாயம் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். வழக்கறிஞர்கள் நிலை உயரும். பால், குடிநீர், ரியல் எஸ்டேட், கெமிக்கல், மருத்துவத் தொழில்கள் முன்னேற்றம் அடையும்

பணியாளர்கள்
ஏப். 30 வரை நெருக்கடி தோன்றும் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். மே 1 முதல் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு விரும்பிய  இடமாற்றம் ஏற்படும். புதிய பொறுப்பு வந்து சேரும். குரு, சூரியன் அருளால் செல்வாக்கு காண்பீர்கள். பணியில் ஏற்பட்ட வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.

பெண்கள்
ஏப். 30 வரை குடும்பத்தில் பிரச்சினைகள் வந்து செல்லும். மே 1 முதல் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும். விருப்பம் பூர்த்தியாகும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். திருமண வயதினருக்கு நல்ல வரன் வரும். பொருளாதாரம் உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நன்மையுண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கனவு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.  

கல்வி
பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் உங்கள் கடின முயற்சி வெற்றி தரும். மேற்படிப்பிற்காக ஆசிரியர்கள் கூறும் ஆலோசனையை ஏஞற நன்மைதரும்.

உடல்நிலை
பரம்பரை நோய்கள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு உஷ்ணம், தோல் தொடர்பான நோய்கள், மூட்டுவலி, இடுப்பு வலி வரலாம். சிலருக்கு அஷ்டமச் சனியால் சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

குடும்பம்
உத்தியோகம், தொழில் வளர்ச்சியால் வருமானம் உயரும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். இடம் வாங்குதல், வீடு கட்டி குடியேறுதல் என கனவு நிறைவேறும். சிலர் விரும்பிய வாகனத்தை வாங்குவர். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை அதிகரிக்கும்.


ஆயில்யம்: யோகமான காலம்

வித்யாகாரகனான புதன், உடல்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கப்போகும் குரோதி வருடம் யோகமான காலமாக இருக்கும். இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். குலதெய்வ அருள் கிடைக்கும். நினைத்ததை சாதிக்க முடியும். எதிர்ப்பு நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். முதலீட்டில் லாபம் அதிகரிக்கும். செயல்களில் வெற்றி உண்டாகும். பொருளாதாரம் உயரும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.

சனி சஞ்சாரம்
ஆயுள் ஸ்தானத்தில் ஆட்சியாக சனி இருப்பதால் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். செல்வாக்கு பாதிக்கும்.  உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். என்றாலும் ஜூன் 19 -  நவ. 4  வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன காலத்திலும் அஷ்டம சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

ராகு, கேது சஞ்சாரம்  
பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், பராக்கிரம ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும்.  முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழந்த சொத்து, செல்வாக்கை மீட்டெடுப்பீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும். செல்வாக்கு உயரும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 10ல் சஞ்சரிக்கும் குருவால் சங்கடங்கள் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வருமானத்தில் நெருக்கடி தோன்றும் என்றாலும் மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், சங்கடங்கள் விலகும். அந்தஸ்து உயரும். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் முன்னேற்றம், பணவரவு ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
ஏப். 14 - ஜூன் 14, செப்.17 - அக்.17, டிச. 16 - 2025, ஜன. 13 காலங்களில் உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். வழக்குகள் சாதகமாகும். எதிரி தொல்லை விலகும். அரசு வழியில்  உண்டான சிக்கல் விலகும், பணியாளர்களுக்கு உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளின் முயற்சி வெற்றியடையும்.

பொதுப்பலன்
3 ம் இட கேதுவின் சஞ்சாரமும், லாப ஸ்தான குருவின் சஞ்சாரமும் உங்கள் நிலையை உயர்த்தும். அதிர்ஷ்ட வாய்ப்பைத் தரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கை உயர்த்தும். சூரிய பகவானால் 120 நாட்களும், செவ்வாயால் 45 நாட்களும் சங்கடங்களில் இருந்து விடுபட்டு செல்வாக்குடன் திகழ்வீர்கள். அஷ்டம சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். திட்டமிட்ட முயற்சி வெற்றியாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். அரசியல்வாதிகளின் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகும்.

தொழில்
தொழில், வியாபாரத்தில் நெருக்கடி நீங்கும். உங்கள் அணுகுமுறை ஆதாயம் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். டிராவல்ஸ், ரியல் எஸ்டேட், குடிநீர், இயந்திரம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட்,  பப்ளிகேஷன்ஸ், ரியல் எஸ்டேட், பங்கு சந்தை, சினிமா, சின்னத்திரை, கல்வி நிறுவனம் போன்றவை முன்னேற்றம் பெறும்.

பணியாளர்கள்
தனியார் துறை ஊழியர்கள் சாதுர்யமாக செயல்படுவர். உங்கள் பிரச்னைகளை முதலாளியிடம் பக்குவமாக சொல்லி தீர்வு காண்பீர்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திறமைக்கு மதிப்பு கிடைக்கும்.

பெண்கள்
வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். தனித்திறமை வெளிப்படும். உயர் கல்விக்கான முயற்சி வெற்றி பெறும். சிலர் வெளி மாநிலம், வெளிநாடு என்று மேற்கல்விக்காக செல்வர். பணியாளர்கள் சலுகை பெறுவர். சிலர் சுயதொழில் தொடங்குவர்.  பொன், பொருள் சேரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வீர்கள்.

கல்வி
வித்யாகாரகனின் அருள் பெற்ற உங்களுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.  மேற்படிப்பு முயற்சி வெற்றி பெறும். விருப்பப்பட்ட படிப்பு, கல்லுாரியில் சேர்வீர்கள்.

உடல்நிலை
உடல்நிலையில் ஏதேனும் சங்கடம் தோன்றியபடி இருக்கும். மருத்துவச் செலவும் கூடும். நரம்பு கோளாறுகள், இதய பாதிப்புகள் ஏற்படும். பித்தம், மயக்கம், ஜலதோஷம் அடிக்கடி சங்கடப்படுத்தும் என்றாலும் விரைவில் குணமடைவீர்கள்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த நெருக்கடி தீரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை சிலருக்கு ஏற்படும். நீண்ட நாளாக தடைபட்ட சுபநிகழ்ச்சி நடந்தேறும். நவீன பொருள், வாகனம் வாங்கும் நிலை உண்டாகும். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்வர். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரம் உயரும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நன்மை பன்மடங்கு அதிகரிக்கும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
உத்திரம்: பணப்புழக்கம் கூடும் ஆற்றல்காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 1 ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar