Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : தமிழ்ப்புத்தாண்டு பலன் ... ரிஷபம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 ரிஷபம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
மேஷம்: தமிழ்ப்புத்தாண்டு 2024 - 2025
எழுத்தின் அளவு:
மேஷம்: தமிழ்ப்புத்தாண்டு 2024 - 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
01:04

அசுவினி; முயற்சியில் வெற்றி

ரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, குரோதி வருடம் உங்கள் வாழ்வில் 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திர நாதனால் எதிர்பார்க்கும் நன்மை கிடைக்கும். இதுவரை இருந்த நெருக்கடி மறையும்.  முயற்சிகள் அனைத்திலும் லாபம் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறுவதுடன் சுயதொழில் செய்து வருபவர்கள் லாபம் காணும் காலமாக அமையும். பொன், பொருள் சேர்க்கையுடன் புதிய சொத்தும் சேரும். பணியாளர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், பதவி உயர்வு என்று முன்னேற்றம் தரும் ஆண்டாக அமையும்.

சனி சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் யோகமான ஆண்டாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அமோக வருமானம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் நட்சத்திர நாதன் கேதுவால் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள், எதிர்ப்புகள் விலகும். உடல்நிலை சீராகும், வழக்கு விவகாரம் சாதகமாகும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருவால் அலைச்சல் ஏற்பட்டாலும் மே1 முதல் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து பொருளாதாரத்தில் உயர்வை உண்டாக்க இருக்கிறார். உடல்நிலையில் இருந்த சங்கடம் தீர்வதுடன் உங்கள் அந்தஸ்தையும் உயர்த்துவார். குடும்பத்தில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கையும், மனநிம்மதியைத் தருவார். இதுவரையில் வேலை, வியாபாரம் என குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஏற்பட்ட இடைவெளி இனி மறையும்.

சூரிய சஞ்சாரம்
சூரிய பகவான் 2024, ஜூன் 15, - ஜூலை 16. செப் 17, - அக் 17, 2025, ஜன 14 - மார்ச் 14 காலங்களில் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார். சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிப்பார். நீங்கள் எதிர்பார்த்த உயர்வை உண்டாக்குவார்.  அரசு வழி செயல்களில் இருந்த தடைகளை விலக்கி ஆதாயத்தை வழங்குவார். அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இதுவரையில் இருந்த சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லும் முயற்சி நிறைவேறும்.

பொதுப்பலன்
நெருக்கடி, சங்கடங்கள் விலகும். பொருளாதார நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகி ஒற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்ப்பு இல்லாத நிலை உருவாகும். ஆரோக்கியம் மேம்படும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களின் மதிப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி லாபம் தரும்.

தொழில்
தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புண்டு. லாபம் அதிகரிக்கும். இயந்திரம், எலக்ட்ரானிக், திரைத்துறை, பங்கு வர்த்தகம், கெமிக்கல், மெடிக்கல் தொழில்கள் முன்னேற்றம் பெறும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.

பெண்கள்
குடும்பத்தில் இருந்த நெருக்கடி தீரும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். சுயதொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணியாளர்கள் சொந்த ஊருக்கு மாறுதல் பெற்று குடும்பத்துடன் வசிக்கும் நிலை உண்டாகும்.

கல்வி
மேற்கல்வி படிக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள்.   சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். கல்வியில் அக்கறை அதிகரிக்கும்.

உடல்நிலை
உங்களை அச்சுறுத்திய நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்களால் உண்டான பாதிப்பு நீங்கும். ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும். எலியும் பூனையுமாக இருந்த தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வர். புதிய பொருட்கள் சேர்க்கையுடன் வாகன, சொத்து சேர்க்கையும் ஏற்படும்.

பரிகாரம்: விநாயகர் வழிபாட்டால் வாழ்க்கை வளமாகும்.


பரணி; அதிர்ஷ்ட காலம்

அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன். தைரிய, வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, பிறக்கப்போகும் குரோதி ஆண்டில் எதிர்பார்ப்பு நிறைவேறும். கடந்தகால நெருக்கடி விலகும். அந்தஸ்து உயரும். செல்வாக்கு ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வாழ்வு வளமாகும். இடம், வாகனம் வாங்குதல், வெளிநாடு செல்லும் யோகம், வேலைத்தேடுவோருக்கு நல்ல வேலை, கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம், தொழிலில் முன்னேற்றம், புதிய தொழிலில் லாபம் காணும் நிலை, எடுத்த செயலில் வெற்றி என அதிர்ஷ்டம் தரும் காலமாக இந்த ஆண்டு இருக்கும்.

சனி சஞ்சாரம்
ஜீவனாதிபதி, லாபாதிபதியுமான சனி லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டங்களை அள்ளித் தருவார். தொழில், வியாபாரத்தில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். விருப்பங்களை பூர்த்தி செய்வார்.

ராகு, கேது சஞ்சாரம்
12 ல் ராகு, 6 ல் கேது உள்ள நிலையில் கேதுவால் உயர்வு காண்பீர்கள். உடல் பாதிப்பு மறையும். எதிரி தொல்லை நீங்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகம் ஏற்படும். தொழில், பணியில்  இருந்த பிரச்னை தீரும். வெளிநாட்டுத் தொடர்பு, முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
 
குரு சஞ்சாரம்
ஏப் 30, வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் முயற்சிகள் இழுபறியானாலும், அலைச்சல் அதிகரித்தாலும் மே 1 முதல் 2 ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து பொருளாதார நிலையில் முன்னேற்றம் தருவார். குடும்பத்தில் இருந்த நெருக்கடி தீரும். பொன், பொருள் சேர்க்கை தருவார். எதிலும் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவார். யோக பலனை வாரி வழங்குவார். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். வருமானம் பல வழியில் வரும்.

சூரிய சஞ்சாரம்
சூரியன் 2024 ஜூன் 15 -  ஜூலை 16. செப். 17 - அக். 17, 2025 ஜன. 14 - மார்ச் 14 ஆகிய காலங்களில்   ராசிக்கு முயற்சி ஸ்தானம், சத்ரு ஸ்தானம், ஜீவன ஸ்தானம், லாப ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் தீரும். ஊதியம் உயரும். தீராமல் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்

பொதுப் பலன்
பணவரவு அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். ஆன்மிகப் பணியில் மனம் செல்லும். செயல்களில் உண்டான தடைகள் விலகும். கடன்கள் அடையும். சொத்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வங்கியில் கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு பொறுப்பு, பதவி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

தொழில்
தொழிலில் இருந்த தடை விலகி லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழியில் சலுகை கிடைக்கும். கல்வி, மருத்துவம், வாகனம், ஸ்பேர் பார்ட்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பைனான்ஸ், விவசாயம் முன்னேற்றம் அடையும். திரையுலகினர், சின்னத்திரையினர், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்களின் நிலை உயரும். தொட்டதெல்லாம் லாபமாகும்.

பணியாளர்கள்
தனியார் நிறுவன பணியாளர்களின்  நிலை உயரும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலகும்.  எதிர்ப்பார்த்த பொறுப்பு உண்டாகும். சம்பளம் அதிகரிக்கும். சலுகை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.

பெண்கள்
உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வேலையில் அமர்வீ்ரகள். சிலர் சுயமாக தொழில் தொடங்கி லாபம் காண்பர். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

கல்வி
தேர்வு முடிவு உங்கள் கனவை நனவாக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். சிலர் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வர். போட்டித் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடத்தில் சேர்வீர்கள்.

உடல்நிலை
ஆறாமிட கேதுவால் ஆரோக்கியம் சீராகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். பரம்பரை நோய்களுக்கு சிகிச்சைகள் பெற்று குணமடைவீர்கள். படுக்கையில் இருந்து மருத்துவம் பெற்றவர் கூட எழுந்து நடமாடும் நிலை உண்டாகும். இனியாவது நேரத்திற்கு சாப்பிடுவது, துாங்குவதுடன் நடைப்பயிற்சியும் அவசியம்

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வேலை, வியாபாரத்திற்காக குடும்பத்தை விட்டு வெளியூர் சென்றவர்கள் மீண்டும்  குடும்பத்துடன் சேர்வீர்கள். புதிய பொருள் சேரும். எண்ணங்கள் நிறைவேறும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பொறுப்புடன் நடப்பர். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்து நடந்து கொள்வர். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் போக்கி சந்தோஷம் தரும்.


கார்த்திகை: யோகமான காலம்

ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் (மேஷம்) பிறந்தவர்களுக்கு பூமிக்காரகனான செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (ரிஷபம்) மனக்காரகனான சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
புத்தாண்டான குரோதி ஆண்டு கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபம், அதிர்ஷ்டத்தை தரும். முயற்சி யாவிலும் வெற்றியைத் தரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு குலதெய்வ அருள், திருமண வயதினருக்கு திருமண யோகம், புதிய தொழில் தொடங்கும் நிலை, பணியில் முன்னேற்றம், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை வாய்ப்பை அளிக்கும்.  
சனி சஞ்சாரம்
கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியுமான சனி ஆண்டு முழுவதும் யோகப் பலன் வழங்குவார். தொழில், வேலையில்  இருந்த நெருக்கடி நீங்கும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.

ராகு, கேது சஞ்சாரம்
1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் செல்வாக்கு உயரும். சங்கடம் விலகும். விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகுவால் அந்நியர் வழியே ஆதாயம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். பொருளாதாரம், செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30 வரை 1ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12 லும்,  மே 1 முதல் 1 ம் பாதத்தினருக்கு 2 லும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கிறார் குருபகவான். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் பொருளாதார முன்னேற்றம் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். முயற்சியில் வெற்றியை தருவார். புகழுக்குரியவராக மாற்றுவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் திருமண யோகத்தை தருவார். செல்வாக்கை அதிகரிப்பார். சமூக அந்தஸ்தை உயர்த்துவார்.

சூரிய சஞ்சாரம்
கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு 2024, ஜூன் 15 - ஜூலை 16, செப். 17 - அக். 17, 2025, ஜன. 14 - மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 2024, ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ.15, 2025, பிப்.13 - ஏப்.13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றம் தருவார். சங்கடத்தில் இருந்து விடுவிப்பார். எதிர்பார்த்த நன்மையை வழங்குவார். வம்பு வழக்குகளில் இருந்து விடுவித்து செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவியை வழங்குவார். அரசு ஊழியர்களின் மதிப்பை அதிகரிப்பார். எதிரி தொல்லையில் இருந்து விடுவிப்பார். ஆரோக்கியம் அளிப்பார். அரசு வகையில் ஆதாயம் தருவார்.

பொதுப்பலன்
தொழில், உத்தியோகம், குடும்பம், வாழ்க்கையில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தீரும். எதிர்பார்க்கும் உதவி சரியான நேரத்தில் வரும். தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும்.

தொழில்
தொழிலில் பிரச்னைகள் விலகும். எதிர்பார்க்கும் வருமானம் உண்டாகும். புதிய முயற்சிகள்  எளிதாக வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இன்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, யூடியூப், சின்னத்திரை, பங்குவர்த்தகம், நிதிநிறுவனம், ஜூவல்லரி தொழில்கள் கை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி தீரும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும். இக்காலத்தில் மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்கள்
வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும். சிலர் படிப்பிற்காக குடும்பத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்வீர்கள்.

உடல்நிலை
நீண்ட நாள் நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். சிலருக்கு இயற்கை வைத்தியம் கை கொடுக்கும். உற்சாகமாக செயல்படும் அளவிற்கு உடல்நிலை சீராகும். உணவு, உறக்கத்தில் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.

குடும்பம்
உற்சாகமுடன் செயல்பட்டு மகிழ்ச்சி காண்பீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.

பரிகாரம்; முருகப்பெருமானை வழிபட்டு வர மனநிம்மதி உண்டாகும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
உத்திரம்: பணப்புழக்கம் கூடும் ஆற்றல்காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 1 ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar