நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு தங்க அங்கி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2011 10:11
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் தங்கத் தேர் செய்யப்பட்டு 3வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நெல்லையப்பருக்கு தங்க முலாம் அங்கியும், காந்திமதி அம்பாளுக்கு தங்க பாவாடையும் அணிவிக்கப்படுகிறது. தங்கத் தேரோட்டமும் நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு ரூ.2 கோடி செலவில் காந்திமதி அம்பாள் உபயத் திருப்பணி மன்றம் சார்பில் தங்கத் தேர் செய்யப்பட்டது. தங்கத் தேர் நெல்லையப்பர் கோயிலில் ஓடி 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3வது ஆண்டு துவங்கியுள்ளது. இதை முன்னிட்டு காந்திமதி அம்பாள் உபயத் திருப்பணி மன்றம் சார்பில் நெல்லையப்பர் கோயிலில் இன்று (7ம் தேதி) இரவு 7 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்கத் தேர் இழுக்கப்படுகிறது. நெல்லையப்பர் சன்னதியில் அமைந்துள்ள விநாயகர், பள்ளத்து மூல மகாலிங்கத்திற்கு வெள்ளி அங்கி அணிவிக்கப்படுகிறது. நெல்லையப்பருக்கு நெல்லை கல்சுரல் அகடமி வழங்கிய தங்க முலாம் பூசப்பட்ட அங்கி அணிவிக்கப்படுகிறது. காந்திமதி அம்பாளுக்கு தங்க பாவாடை அணிவிக்கப்படுகிறது. தங்கத் தேர் ஓடி 3வது ஆண்டை முன்னிட்டு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு அர்ச்சனையும், பூஜைகளும் நடக்கிறது.