Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளைத் துணியில் ஏறிய சாயம் மகா பெரியவர் இல்லம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
05:06

*அன்பு மனம் கொண்ட நல்லவர்களின் வாழ்வு, உலகமே போற்றும் விதத்தில் சிறப்பாக அமையும்.
*பேச்சில் உண்மையும், செயலில் நேர்மையும் நிரம்பியதாக வாழ்க்கை இருக்க வேண்டும். சினம் என்னும் நெருப்பிற்கு  இடம் தரக் கூடாது.
*மலர்களின் மணம்,  பறவைகளின் இனிய குரல், சூரிய உதயம் என அனைத்தையும்  கண்டு மகிழுங்கள். இயற்கையின்
இனிமையை அனுபவிக்க பழகுங்கள்.
*மலர்களின் வாசனை காற்று அடிக்கும் திசையில் பரவும்.  ஆனால், நல்லவர் புகழோ காற்றையும் கடந்து நாலாபக்கங்களிலும் பரவி விடும்.
*புண்ணியமான செயல்களில்  விரைந்து ஈடுபடுங்கள். பாவச் செயல்களில் இருந்து மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
*பிறருக்கு உபதேசிக்கும் முன் மனிதன், தன்னைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். சுயகட்டுப்பாடே ஒழுக்கத்தின் அடிப்படை.
*பணம், பட்டம், பதவி என எத்தனை சிறப்பை மனிதன் பெற்றிருந்தாலும் சிந்திக்கும் அறிவு இல்லாவிட்டால்  பயன் இல்லாமல் போகும்.
*அறிவாளியின் நட்பு, உறவினரைப் போல  இன்பம் அளிக்கும். மூடர் நட்பு, பகைவனைப் போல துன்பம் கொடுக்கும்.
*இரு தரப்பு வாதங்களையும் பொறுமையுடன் கேட்ட பின்னரே, நடுவுநிலையுடன்  தீர்ப்பு அளிக்க வேண்டும்.
*தனக்குத் தானே தலைவனாக மனிதன் திகழ வேண்டும். தன்னைத் தானே அடக்கப் பழகியவன் தலைமைப் பதவிக்கு  தகுதி பெறுவான்.
*உண்மையை யாராலும் மறைக்க முடியாது. மேகத்தில் இருந்து விடுபட்ட நிலா போல உண்மை உலகெங்கும் பிரகாசிக்கும்.
*பொற்காசு மழை போல பொழிந்தாலும் பேராசை மிக்கவனுக்கு மனம் அடங்காது. வேட்டைக்காரனிடம் சிக்கிய முயல் போல அவன் அலைய நேரிடும்.
*அறிவுள்ள எதிரியை விட முட்டாள் நண்பனின் நட்பு தீமை தரும்.  
*மூடப்பழக்கத்தை விட்டொழியுங்கள். ஒழுக்கத்தை உயிராக போற்றுங்கள்.
*அவசியமான நேரத்தில்  பேசுங்கள். மற்ற நேரத்தில் அமைதியைக் கடைபிடியுங்கள்.
*விழிப்போடு இருந்தால் வாழ்வு சுகமாக இருக்கும். துன்பம் நேரும் போது, மனம் விட்டு அழுதால் மன அழுக்குகள் கரைந்து போகும்.
*உண்மை என்பதற்காக பிறர் மனம் புண்பட பேசக் கூடாது. நமக்கு மட்டுமின்றி மற்றவரும் நன்மை அடையும் விதத்தில் பேச வேண்டும்.
*பகையை பகையால் வெல்ல முடியாது. அன்பு ஒன்றே அதற்குரிய ஒரே தீர்வு.
*எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதன் தரத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதுவே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
*நமக்கு மட்டுமின்றி நம்மைச் சார்ந்த சமுதாயம், உலகத்திற்கும் பயன் அளிப்பதாக மனிதனின் வாழ்க்கை அமைய வேண்டும். - வாழ்த்துகிறார்  புத்தர் -

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar