Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) திடீர் பணவரவு கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) வளமான வாழ்வு கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன்! (17.7.2017- 16.8.2017)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
17:20

பெற்றோரை மதிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

மாத முற்பகுதி சுமார் பலன் என்றாலும், பிற்பகுதியில் அதிக பலனைக் காணலாம். சுக்கிரன், கேது ஜூலை 26-ல் சாதகமான இடத்திற்கு வந்து  நற்பலன் தருவார்கள். குரு பகவானின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். புதன் ஜூலை 20- வரை கடகத்தில் இருந்தாலும், பின்  உங்கள் ராசிக்கு வருவதாலும்,  ஆக., 6-ல் வக்கிரம் அடைந்து மீண்டும் கடக ராசிக்கு  செல்வதாலும் அவரால் நன்மை தர இயலாது. சூரியன், செவ்வாய், சனி ஆகியோராலும் பலனை எதிர்பார்க்க முடியாது.  மாத முற்பகுதியில் எந்த ஒரு திட்டத்தையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். கேது 7-ம் இடமான கும்பத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும்  உடல் உபாதைகளையும் தரலாம். அவர் ஜூலை 26-ல், 6-ம் இடமான மகரத்திற்கு வருவதன் மூலம் அந்த நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும்.  ராகு  உங்கள் ராசியில் இருந்து உறவினர்கள் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். அவர் ஜூலை 27ல் இடம்மாறி, 12-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். இங்கு அவர் பொருள் விரயத்தையும்,
துாரதேச பயணத்தையும் கொடுப்பார்.

குருவால் பொருளாதார வளம் சீராக இருக்கும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். சந்திரன் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவதால். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். முக்கிய முடிவு எடுப்பதை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். குடும்ப பெரியோர்கள்,  சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  ஜூலை 20-க்கு பிறகு வீட்டில் சில பிரச்னைகள், உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். ஜூலை 25-க்கு பிறகு பணவரவு இருக்கும். ஜூலை 21,22-ல் விருந்தினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக., 1,2,3-ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். ஒதுங்கி இருக்கவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சூரியனால் அதிக செலவு ஏற்படலாம். புதன் பகவான் தந்த போட்டியாளர்கள் வகையிலான  தொல்லை, முயற்சிகளில் இருந்த தடை முதலியன ஜூலை 20க்கு பிறகு மறையும். ஜூலை 25க்கு பிறகு லாபம் இருக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். ஆக. 6, 7, 8-ல்  திடீர் பணவரவு இருக்கும். ஜூலை 23, 24, 28, 29-ல் பணப்பிரச்னை வரலாம். அந்த நாட்களில் பணப்பொறுப்பை நீங்களே நேரடியாகக் கவனிக்கவும்.

பணியாளர்களுக்கு வேலையில் பிடிப்பு நிலை இல்லாத நிலை இருக்கும். வேலைப்பளுவும் அலைச்சலும் ஏற்படும். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. ஜூலை 19, 20 ஆக., 15, 16- சிறப்பான நாட்களாக இருக்கும். இந்த நாட்களில் டிரான்ஸ்பர், பதவி, சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம்.

கலைஞர்கள் கடந்த மாதம் இருந்த பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். ஜூலை 25-க்கு பிறகு வாழ்க்கையில் வசந்தம் பிறக்கும். உங்கள் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள், எதிர்பார்த்த புகழ் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். கவுரவத்திற்கு பங்கம் வராது. மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டி இருக்கும். இருப்பினும் குரு  பக்கபலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.  மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகளுக்கு சீரான மகசூல் கிடைக்கும். பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். ஜூலை 25-க்கு பிறகு  உங்களால் குடும்பம் சிறப்படையும். பிள்ளைகளால் சிறப்படைவீர்கள். ஆடம்பர பொருட்கள் கிடைக்கும். குடும்பத்தோடு புனிதத்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  

நல்ல நாள்: ஜூலை19, 20, 21, 22, 26, 27, 30, 31 ஆக. 6, 7, 8, 9, 10, 15, 16
கவன நாள்: ஆக. 11,12- சந்திராஷ்டமம்.  
அதிர்ஷ்ட எண்: 1,3 நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்
* சனிக்கிழமை நவக்கிரக வழிபாடு.
* வெள்ளியன்று லட்சுமிக்கு அர்ச்சனை.
* புதன்கிழமை ஏழைகளுக்கு தானம்.

 
மேலும் ஆடி ராசிபலன்! (17.7.2017- 16.8.2017) »
temple
அன்பு மனம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்களுக்கு கேதுவால் நன்மை ஏற்படும். சுக்கிரன் ஜூலை ... மேலும்
 
temple
மன உறுதி மிக்க ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் பணமழை கொட்டும் சிறப்பான மாதமாக அமையும். கடந்த மாதம் ... மேலும்
 
temple
உழைப்பில் ஆர்வமிக்க மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஜூலை 26-ல், 12-ம் இடத்தில் இருந்து  உங்கள் ... மேலும்
 
temple
பண்பும் பணிவும் கொண்ட கடக  ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஜூலை 26- வரை ரிஷபத்தில்  இருந்து நற்பலனைத் ... மேலும்
 
temple
கடமை உணர்வு மிக்க கன்னி ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.