ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இங்கு, சன்னிதி எதிரே உள்ள கொடிக்கம்பத்தில், கோவில் குருக்கள், திருவிழா கொடியேற்றினார். இதையடுத்து, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிப்., 15 மகா சிவராத்திரியன்று, பகல் – இரவு முழுதும், கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். பிப்.,16ல் மாசி தேரோட்டம், வீதி உலா நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.