ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்: சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் ராசிக்கு சுகாதிபதியான சூரியன், அஷ்டம ஸ்தானத்தை விட்டு விலகி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். சூழ்நிலையின் காரணமாக மனதில் ஒருவித பயம் இருந்தாலும் உங்கள் வேலையில் உறுதியாக இருப்பீர்கள். பிப்.7 வரை ராசியாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் பொருளாதார நிலை உயரும். புதிய இடம், வாகனம் வாங்க முடியும். மனதை அழுத்திக் கொண்டிருந்த சங்கடம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். எதிர்பார்த்த பணம் வரும். இதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த தொழில்கள் இனி லாபம் காணும். கடந்த மாதம் வரை தடைபட்டு உங்களுக்கு பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்திய வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுப்பது கூடுதல் நன்மை தரும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும். கையில் பணம் புழங்கும்.
சந்திராஷ்டமம்: ஜன.16
அதிர்ஷ்ட நாள்: ஜன.15,19,24,28,பிப்.1,6,10
பரிகாரம்
சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.
ரோகிணி
நினைத்ததை சாதிக்கும் வரை உறுதியாக இருந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மை தரும் மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் ராசிநாதனுடன் செவ்வாய், சூரியன், புதன் சஞ்சரிக்கும் நிலையில் தை மாதம் பிறப்பதால், திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் வெற்றி உண்டாகும். புத, ஆதித்ய யோகத்தால் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கையில் இருந்த பெரிய பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். இதுவரை உங்களுக்கிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். தெய்வ அருளால் மனதில் நிம்மதி உண்டாகும். சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழும் அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வாங்க நினைத்த இடத்தை வாங்க முடியும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய முதலீடு செய்பவர்கள் நன்றாக யோசித்து அதன் பிறகு முதலீடு செய்வது நன்மை தரும். வர வேண்டிய வருமானம் வந்து கொண்டிருக்கும். தாயாரின் நிலையில் சங்கடங்கள் வரும். எந்த ஒன்றிலும் உங்கள் முயற்சிக்கேற்ப நன்மையை அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு வரும். மாதக்கடைசியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பொன், பொருள், புதிய வாகனம் என குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன.17
அதிர்ஷட நாள்: ஜன.15, 20, 24, 29. பிப். 2, 6, 11
பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2 ம் பாதம்: துணிச்சலாக செயல்பட்டு எடுத்த வேலையில் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாகும். இரண்டாம் இடத்தில் வக்கிரம் அடைந்திருக்கும் குரு, குடும்பத்திற்குள் நன்மைகளை அதிகரிப்பார். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாக்குவார். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். உங்கள் ராசியாதிபதியுடன் புதன், செவ்வாய், சூரியன் இணைந்திருப்பதால் ஒவ்வொரு வேலையையும் நான்கு வழிகளில் முயற்சி செய்வீர்கள். வருமானமும் ஒன்றில் இல்லாவிட்டால் மற்றொன்றில் வந்து கொண்டிருக்கும். தொழிலை விரிவு செய்வதுடன் வேறொரு தொழிலையும் தொடங்குவீர்கள். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வயதானவர்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வாழ்க்கைத்துணைக்கு உடல் சங்கடம் வந்தாலும் விரைவில் குணமாகும். ஜன. 29 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். என்றோ செய்த முதலீட்டில் இருந்து ஆதாயம் வரும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். விற்பனையில் இருந்த பிரச்னை விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். பணியாளர்கள் தங்களுக்குரிய பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதுடன், மேலதிகாரியின் ஆலோசனையை பின்பற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன.18
அதிர்ஷ்ட நாள்: ஜன.24, 27, பிப்.6, 9
பரிகாரம்
திருத்தணி முருகனை வழிபட உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.
மேலும்
தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »