பதிவு செய்த நாள்
14
ஜன
2026
10:01
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் சஞ்சரித்தாலும், லாபாதிபதி சனி லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சந்திப்பதுடன், யோகக்காரகன் ராகுவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் கை கொடுக்கும். அந்நியரால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் பாக்யாதிபதி மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரித்தாலும், வக்கிர குரு முன் ராசிக்குரிய பலனைக் கொடுப்பார் என்பதால், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்ப்பு, நோய்நொடி, வழக்கு போன்ற சங்கடங்கள் விலகும். திடீர் வாய்ப்பு தேடி வரும். நடப்பவை யாவும் நன்மையாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். முடங்கிக் கிடந்த தொழில்கள் மீண்டும் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஒத்துழைப்புக் கிடைக்கும். சேமிப்பு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். விவசாயிகள் இந்த நேரத்தில் விளைச்சலில் அக்கறை செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 16, 18, 25, 27, பிப். 7, 9.
கற்பக விநாயகரை வழிபட வாழ்க்கையில் நன்மை நடக்கும்.
எந்த நிலை வந்தாலும் அதற்கேற்ப வாழத் தெரிந்த உங்களுக்கு, தை முன்னேற்றமான மாதமாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுதும் பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. பிப். 7 வரை சுக்கிரன் உங்கள் ஆசைகளைத் துாண்டி செலவுகளை அதிகரிக்கலாம் என்பதால் பண விவகாரத்தில் கொஞ்சம் கூடுதலாக எச்சரிக்கை தேவை. உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சூரியனைக் கண்ட பனி போல சங்கடங்கள் விலகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்பவர்களுக்கு அரசின் அனுமதி கிடைக்கும். கடனாக கேட்டிருந்த பணம் கைக்கு வரும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். சகாய ஸ்தனாதிபதி புதனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விற்பனை உயரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர்.
சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். ஞான மோட்சக்காரகன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உறவினர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 15, பிப்.11.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 18, 24, 27, பிப். 6, 9.
திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உங்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன், மாதம் முழுவதும் ஜீவன ஸ்தானத்தில் புதனுடன் இணைந்து, புத ஆதித்ய யோகத்தை அளிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்தது நடந்தேறும். பொன்னும், பொருளும் சேரும். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலையில் செல்வாக்கு உயரும். நடக்குமா நடக்காதா என கேள்விக்குறியாக இருந்த வேலைகள் எல்லாம் இப்போது நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் செல்வாக்கை உயர்த்துவர். பொருளாதார நிலை மேம்படும். இதுவரை இருந்த நெருக்கடி மறையும். எதிர்பார்த்த பணம் வரும். திடீர் வாய்ப்பால் உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கையில் பணம் புழங்கும். தொழிலை விரிவு செய்யக்கூடிய நிலை ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்கள் கனவு நனவாகும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் லாபம் அதிகரிக்கும். ஐந்தாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை.
சந்திராஷ்டமம்: ஜன.16, பிப்.12
அதிர்ஷ்ட நாள்: ஜன.18,19, 27, 28, பிப்.1,9,10
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.