அன்னூர் மன்னிஸ்வரர் கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2026 10:02
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். அவரின் குருபூஜை விழா, கோவை மாவட்டம் அன்னூர் மன்னிஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு முன்பாக பெரியபுராணம் வைக்கப்பட்டு குருபூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.