Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்தரை கூவம் ஆற்றில் 3 கற்சிலை ... திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
12:02

மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு ஆறுபடை வீடுகளுக்கு இணையாக செல்வ முத்துக்குமார சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இதனால் சிவ மூத்தமும், சக்தி மூத்தமும், முருக மூர்த்தமும் ஒருசேர அமைந்த தலமாக திகழ்கிறது. செவ்வாய் அதிதேவதையான முருகப்பெருமானை இத்தலத்தில் தை மாத செவ்வாயில் வழிபடுவோர் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட்டு இம்மை மறுமை இன்பம் எய்துவர். இதனால் இத்தலத்தில் தை செவ்வாய் உற்சவம்  ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தை செவ்வாய் உற்சவத்தில் 9ம் நாள் விழாவான இன்று திருதேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் செல்வ முத்துக்குமார சுவாமி திருத்தேரில் எழுந்தருள தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு மாட வீதிகளை வலம் வந்து நிலையை அடைந்தது. வழி முழுவதும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும், ஆரத்தி எடுத்தும் வழிபாடு நடத்தினர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரி ரமணி தலைமையிலானோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை: கோவை, உக்கடம் பை-பாஸ் ரோடு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் தை மாதம் தேய்பிறை அஷ்டமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar