தேவையான வசதிகள் இல்லை தேனியில் ஐயப்ப பக்தர்கள் சிரமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2011 10:11
தேனி:தேனி மாவட்டத்தில் அடிப்படை வசதிகளும் செய்யப்படாததால், ஐயப்ப பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களில் பல லட்சம் பேர் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர். ஆண்டுக்கு 25 லட்சம் பேர் தேனி மாவட்டத்தை கடந்து செல்வதாக ஐயப்ப பக்தர்கள் சேவா குழு கணக்கீடு செய்துள்ளது.தேனி மாவட்டத்தில் வைகை அணை, கும்பக்கரை அருவி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில், லோயர்கேம்ப் பகவதியம்மன் கோயில் பெரியாறு அணை, சுருளி அருவிக்கு பக்தர்கள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.வைகை அணை தவிர மற்ற இடங்களில் பக்தர்கள் தங்கி குளித்து உடைமாற்றுகின்றனர். ஆனால் இங்கு பக்தர்கள் தங்கவும், கழிப்பிடம் செல்லவும் போதிய வசதிகள் இல்லை. உடை மாற்றுவதற்கோ, உட்கார்ந்து உணவு உண்பதற்கான வசதிகளும் இல்லை. வரும் பக்தர்கள் ஆண்கள் என்பதால் வெட்ட வெளியில் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு, குளித்து உடை மாற்றி விடுகின்றனர்.உணவு: பக்தர்களை கணக்கில் கொண்டு தற்காலிக ஓட்டல்கள் ஆரம்பித்துள்ளனர். இங்கு சுகாதாரம் இல்லை. தரமற்ற உணவுகளும் வழங்கப்படுகிறது. மருத்துவ வசதியும் இல்லை. உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தேனி மாவட்டம் வழியாக செல்லும் 70 சதவீத பக்தர்கள் வாகனங்கள் நிற்பதில்லை. 2 சதவீத பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். அதேபோல் யாரும் தங்குவதில்லை. இதனால் இதுவரை பக்தர்களுக்கு என தனியாக வசதிகள் செய்யவில்லை,என்றார்.