குருவாயூரில் லட்ச தீபம் கிருஷ்ணன் கோவில் ஜொலித்தது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2011 10:11
குருவாயூர் : குருவாயூர் ஏகாதசி விளக்கு உற்சவத்தின் ஒரு பகுதியாக, கிருஷ்ணன் கோவில் சுற்றுப் பிரகாரத்தில் லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டதால், கோவில் வளாகம் பிரகாசித்தது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தற்போது குருவாயூர் ஏகாதசி விளக்கு உற்சவம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவிலில் அய்யப்ப பஜன சபா சார்பில் ஆண்டுதோறும் லட்சம் தீபங்கள் ஏற்று வழிபடுவது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் மாலை கோவிலில் தீபாராதனை நிகழ்ச்சிக்கு பின், நடை திறக்கப்பட்டதும், கோவில் சுற்றுப் பிரகாரம் முழுவதும், வெளியேயும் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தது. கோவிலைச் சுற்றிலும் உள்ள தெருக்களிலும், துவஜஸ்தம்பம் என பல இடங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு கோவில் வளாகமே தகதக வென ஜொலித்தது. தீபங்கள் ஏற்றுவதற்கு உபயதாரருடன் பக்தர்களும் சேர்ந்து உதவினர்.