Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கயாவில் துளசி செடி வளராதது ஏன்? கயாவில் துளசி செடி வளராதது ஏன்? அசுத்தமானது பம்பா நதி அசுத்தமானது பம்பா நதி
முதல் பக்கம் » துளிகள்
தோஷத்துக்கு ஒரு கோவில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2017
15:20

தோஷம் நீங்க பல கோவில்களுக்கு சென்றிருப்போம்; ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்க  சுவாமி கோவிலிலோ, ஒரு தோஷத்துக்கே சிலை உள்ளது. பிரம்மஹத்தி எனப்படும் இச்சிலையை வழிபட்டால், மிக மிக நல்லவரைக் கொன்ற  பாவமே நீங்கும்.

மருத மரத்தை தலவிருட்சமாக கொண்ட தலங்கள், அர்ஜுனத் தலங்கள் என்றழைக்கப்படும். வடக்கிலுள்ள ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனம்; தெற்கில்,  திருநெல்வேலி அருகிலுள்ள திருப்புடைமருதூர், ஜுடார்ஜுனம். இவ்விரு தலங்களுக்கும் மத்தியில் அமைந்த திருவிடைமருதூர் மத்தியார்ஜுனம்  எனப்படும். சிவாலயங்களில் ஏழு பிரகாரம் கொண்ட கோவில் இது. கோபுரம், பிரகாரம் மற்றும் கிணறு எல்லாமே ஏழு என்ற எண்ணிக்கையில்  உள்ளது. தமிழகத்தில் ஏழு பிரகாரம் கொண்ட சிவன் கோவில் வேறு எங்குமில்லை. தன் குருவான பிரகஸ்பதியின் மனைவி மீது ஆசை  கொண்டான், சந்திரன். இதனால், அவனுக்கு தோஷம் உண்டாக, தன் மனைவிகளான, 27 நட்சத்திர தேவியருடன் இங்கு வந்து சிவனை வேண்டி  தவமிருந்தான். அவனுக்கு இரங்கி, விமோசனம் அளித்தார், சிவபெருமான்.

குரு துரோகம் பொல்லாதது; அதற்கே இங்கு விமோசனம் கிடைத்தது. 27 நட்சத்திரங்களும் இங்கு லிங்க வடிவமாக, ஒரே சன்னிதியில் உள்ளன.  தங்கள் நட்சத்திர லிங்கத்தின் முன் விளக்கேற்றுவர், பக்தர்கள். மதுரையை ஆண்ட வரகுண பாண்டியன், அறியாமல் செய்த கொலைக்காக,  பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டான். விமோசனத்திற்காக இத்தலம் வந்து, மகாலிங்க சுவாமியை வழிபட, அவனைப் பற்றியிருந்த  தோஷத்தை நீக்கினார், சிவன். சிவன் சன்னிதி இரண்டாம் பிரகாரத்தில், பிரம்மஹத்திக்கு சிலை உள்ளது. அறியாமல் செய்த பாவம் நீங்க,  இச்சிலையின் முன் உப்பு மற்றும் மிளகிட்டு வேண்டுகின்றனர். மேலும், இக்கோவிலுக்குள் எந்த வழியில் சென்றோமோ, அதே வழியில்  திரும்பக்கூடாது என்பது நடைமுறையில் உள்ளது; இதன் காரணத்தை, கட்டுரையின் முடிவில் அறியலாம். இங்கு, சிவன் சன்னிதி எதிரிலுள்ள  கோபுரம் வழியாக உள்ளே நுழைந்து, முதலில் படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்பாள் சன்னிதிகளுக்குச் சென்று, பின், மூகாம்பிகை  சன்னிதியுடன் தரிசனத்தை முடித்து, வேறு வாசல் வழியாக வெளியே வர வேண்டும். காரணம், நம்மை பிடித்த பீடைகள் நுழைவு வாசலில் நின்று  கொள்ளும். கோவிலை விட்டு வெளியேறியதும், மீண்டும் தொற்றிக் கொள்ளும். வேறு வாசல் வழியாக வந்து விட்டால், அது, நம்மை  பீடிப்பதில்லை என்பது, நம்பிக்கை.கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில், 10 கி.மீ., தூரத்தில் உள்ளது, இக்கோவில்.

 
மேலும் துளிகள் »
temple
இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.  எப்போது வேண்டுமானாலும் குழந்தை ... மேலும்
 
temple
ஓம்....

உலகாளும் ஈஸ்வர உமா மஹேஸ்வரா
எமையாளும சங்கரா விஸ்வநாத சிவா
தேவாதி தேவா தேவ திவ்ய ... மேலும்
 
temple
1. சீதக் களபச் செந்தாமரைப் பூம்,
   பாத சிலம்பு பல இசை பாடப்
 
பொருள்: குளிர்ச்சியும் நருமணமும் ... மேலும்
 
temple

மனிதன் என்பவன் யார்? செப்டம்பர் 17,2018

விடை சொல்கிறார் ரமணர்

* நற்செயல் செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவியே மனிதன்.
* நான் யார் ... மேலும்
 
temple
ஏழுமலையானை தரிசிக்க ஏழு முறை வந்தவர் விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர். விஜய நகர ஆட்சியில் கி.பி.1509 முதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.