விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2025 11:01
திருப்பூர்: திருநீலகண்ட நாயனார் குருபூஜையை விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இன்று திருநீலகண்டர் குருபூஜை விழா நடந்தது. மூலவர் மற்றும் உற்சவ நீலகண்டருக்கு, அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது. கோவிலிலிருந்து நடராஜர் சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடந்தது. கரட்டாங்காடு வரை சுவாமி புறப்பாடு நடைபெற்று, சப்பரத்தில், கோவிலை வலம் வந்து திருநீலகண்டர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புறப்பாட்டில் சிவனடியார்கள் கைலாய வாத்தியம் வாசித்தபடி சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், திருநீலகண்டர் குருபூஜை விழா, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் இன்று கொண்டாடப்பட்டது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், இருந்து சந்திரசேகரமும், திருநீலகண்டரும், குலாலர் மண்டபத்துக்கு எழுந்தருளினர். அங்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரபூஜையும், சிவனடியாருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.