பதிவு செய்த நாள்
23
ஜன
2025
10:01
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, கிரிவலப்பாதையிலுள்ள சங்கர மடத்தில் நேற்று, 22 முதல் வரும், 28ம் தேதி வரை நடக்கும் சத சண்டி ஹோமத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலுள்ள சங்கர மடத்தில் கடந்த, 20ம் தேதி முதல், 3 வேளை, ஸ்ரீமஹா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் பூஜை மற்றும் வேதபாரணயம் வரும், 28ம் தேதி வரை நடக்கிறது. நேற்று, 22ம் தேதி முதல், வரும், 28ம் தேதி வரை சதசண்டி ஹோமம், 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை காம்யார்த்த ஹோமம் நடக்க உள்ளது. இதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜை செய்ய, திருவண்ணாமலை மடத்திற்கு வருகை தந்துள்ளார். பக்தர்கள் அருளாசி பெற, திருவண்ணாமலை சங்கர மடத்தின் நிர்வாகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.