சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், பயபக்தியுடன் பயன்படுத்தும் நதி தான், பம்பா! ஆனால், இந்நதி, நாளுக்கு நாள் அசுத்தமாகி வருவதுடன், கோலிபாம் என்ற நோய் கிருமி அதிக அளவில் கலந்துள்ளது. தேசிய நதி பாதுகாப்பு அமைப்பு சார்பாக, 300 கோடி ரூபாய் செலவில், பம்பா நதி சுத்திகரிப்பு முயற்சி நடைபெற்றது; ஆனால், வழக்கம் போல் நதி நீர் சுத்தப்படுத்தப்படவில்லை; அதற்காக செலவிடப்பட்ட, 300 கோடி ரூபாய் பணம் தான், ஆற்றில் போட்டது மாதிரி ஆகி விட்டது; அது, சுத்திகரிப்பு அதிகாரிகளின், பைக்குள் போய் இருக்கலாம் எனவும் பேசிக் கொள்கின்றனர்.