பாடுபட்டு தேடிய பணத்தை சேமிக்க ஆயிரம் வழிமுறை உண்டு. ஆனால் சேமிக்க தெய்வப்புலவர் திருவள்ளுவர் வழிகாட்டுவதைப் பாருங்கள். ஈகை என்னும் அதிகாரத்தில்,
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றார் பொருள் வைப்புழி
என்கிறார். ஏழைகள் பசியால் வாடும் போது, அன்னமிட்டு பசி போக்குபவனுக்கு இறையருள் கிடைப்பது உறுதி. அந்த புண்ணிய பலன், சரியான நேரத்தில் நம் உயிரையும் காக்க துணைபுரியும் என்கிறார். தர்மம் தலை காக்கும் என்றும் இதைக் குறிப்பிடுவர். இறையருள் என்னும் லாபம் கிடைக்க இதை விட சிறந்த முதலீடு வேறில்லை.