Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்! குலதெய்வ நேர்த்திக்கடன், தடைபட்டால் வீட்டிலேயே செய்யலாமா? குலதெய்வ நேர்த்திக்கடன், தடைபட்டால் ...
முதல் பக்கம் » துளிகள்
கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் நைவேத்தியமும் சிறப்பும்!
எழுத்தின் அளவு:
கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் நைவேத்தியமும் சிறப்பும்!

பதிவு செய்த நாள்

01 நவ
2017
02:11

மதுரைக் காஞ்சி, இறைவனுக்கு அமுது படைப்பதை ‘மடை ’ என்று குறிப்பிடுகிறது. பழைமையான ஆற்றுப்படை இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை, தெய்வத்துக்கு அமுது படைப்பதை, ‘தெய்வ மடை ’ என்று சிறப்பிக்கிறது. ‘மடை’ என்ற இந்தச் சொல் வழக்கே, பிற்காலத்தில் ‘அமுது ’ என்றானது. பிற்காலச் சோழர்களின் கல்வெட்டுகளில்தான் மடை என்னும் சொல்லானது. அமுது என்றானதாகத் தெரிய வருகிறது. இறைவனுக்கு ஒருநாளைக்கு எத்தனை வேளை அமுதுபடி செய்ய வேண்டும். என்னென்ன உணவு வகைகள் அமுதுபடி செய்ய வேண்டும், இறைவனுக்குச் செய்யும் அமுதுபடி தினசரி எப்படி இருக்க வேண்டும். விழாக்காலங்களில் எப்படி இருக்க வேண்டும், இறைவனின் அமுதுபடியை யாரெல்லாம் உண்ண வேண்டும், அமுது படிக்கான கொடைகள் என்பது போன்ற பல விவரங்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

“நாம் எப்படி சாப்பிடுகிறோமா அதேபோல் இறைவனும் சாப்பிடுகிறார் என்ற மனிதனின் எண்ணமும், நாம் என்னவெல்லாம் இறைவனுக்குக் கொடுக்கிறோமோ, அவை பன்மடங்காக நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்ற அவனது நம்பிக்கையும் தான் அமுதுபடிக்கான அடிப்படைக் காரணம்.

அக்காலத்தில் இதற்கு ‘மடை வைத்தல் ’ என்று பெயர். மடை என்ற சொல்லுக்கு ‘உணவு’ என்று பொருள். ‘மடுத்தல் ’ என்றால் ‘ஏற்றுக்கொள்ளுதல் ’ என்று பொருள் உணவு சமைக்கும் இடத்தை ‘மடைப்பள்ளி ’ என்று சொல்கிறோம். ‘மடுத்தல் ’ என்பதையே இன்று நிவேதனம் என்கிறோம்.

‘நிவேதனம் ’ என்ற சமஸ்கிருத சொல்லுக்குச் சாப்பிடுதல் என்று பொருள் இல்லை. ‘கண்டருளல்’ என்றே பொருள். இதுவே சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் போது ‘பலி’ என்று சொல்லப்படுகிறது. ‘பலித்தல் ’ என்றால் ஏற்றுக்கொள்ளுதல்; நம்மிடமிருந்து சிறு தெய்வங்கள் உரிமையாகப் பெற்றுக்கொள்ளுதல் என்று பொருள். நிவேதனம் செய்வது தமிழில் அமுது படையல் என்றானது. அமுது படையல் செய்வதில் பல நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன. ஒருபடி அரிசிக்கு இவ்வளவு பருப்பு, இவ்வளவு நெய் என்பது போன்ற அளவுகளும் உண்டு. கோயில்கள் பெரியதாக வளர்ச்சி அடைந்த பிறகு சுவாமிக்கு ஒருவேளை அமுது படையல் என்பது போய், மூன்று வேளையும் அமுது படையல் என்ற நடைமுறை ஏற்பட்டது.

முன்பெல்லாம் கோயிலுக்கென்றே நிறைய பணியாளர்கள் கோயிலைப் பெருக்கிச் சுத்தம் செய்ய, பாத்திரங்கள் தேய்க்க, நந்தவனத்தைப் பராமரிக்க, விளக்கு போடுபவர் என்று நிறைய பேர் கோயிலில் வேலை செய்வார்கள். எப்படிப் பார்த்தாலும் ஒரு கோயிலில் குறைந்தது 30 பேர்களாவது இருப்பார்கள். இவர்களைத் தவிர தேசாந்திரியாக யாத்திரை வருபவர்களுக்கும் கோயில்களில் உணவு தருவார்கள். ஆக, இறைவனுக்கு அமுதுபடி என்பது, நாம் உண்ணும் உணவை சுவாமி கண்டருளச் செய்து, பிறகு நாம் உண்ணக்கிடைப்பதே ஆகும்” என்றார். இன்றைக்கும் சில கோயில்களில் அமுதுபடி நெறிமுறைகள் சிறந்து விளங்குகின்றன. அதுபற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் அறிவோமா?

செந்தூர் சண்முகருக்கு பல்லாக்கு உருண்டை: திருச்செந்தூரில் மூலவருக்கும் உற்சவருக்கும் கால பூஜைகள் ஒன்றாக இருந்தாலும், நிவேதனங்கள் மாறுபடுகின்றன. மூலவருக்குக் காலை உதய மார்த்தாண்ட பூஜையின் போது சிறுபருப்பு பொங்கல், மூன்றாவது காலச்சந்தியில் சுத்த அன்னம், உச்சிக்கால பூஜையில் அப்பம், வடை, தோசையும், மாலை 5 மணி பூஜையில் சர்க்கரைப் பாகுடன் சேர்த்த பொரியும், இரவு சுத்த அன்னமும் பாலும் நிவேதனமாகும். உற்சவர் சண்முகருக்கு உதயமார்த்தாண்ட பூஜையின்போது சிறுபருப்பு கஞ்சி, தோசை, தயிர்சாதம், ஆகியவையும், இரண்டாம், மூன்றாம் காலசந்தி பூஜைகளின்போது சுத்த அன்னமும், உச்சிக்கால பூஜையில் நெய்யுடன் கூடிய சுத்த அன்னமும், பால் மாங்காய், இஞ்சி, நார்த்தை, எலுமிச்சை, உப்பு, மஞ்சள், பொடி கலந்த ஊறுகாயும் நிவேதனம் செய்யப்படுகின்றன. சாயரட்சை பூஜையின்போது தேன்குழல், அப்பம், அதிரசமும், இரவு பூஜையில் சுத்த அன்னமும், பள்ளியறை பூஜையில் அரவணை, பல்லாக்கு உருண்டை (சிறுபருப்பு, வெல்லம், தேங்காய் கலந்து செய்வது) பால்கோவா, காய்ச்சப்பட்ட பசும்பால் ஆகியவையும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

உதயமார்த்தாண்டம், மூன்றாவது காலசந்தி, உச்சிக்காலம் ஆகிய மூன்று  கால பூஜையின்போது மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்படுவதற்கு முன்னர், மடைப்பள்ளியில் தனியாக விறகு அடுப்பில் தீ மூட்டி நெருப்புக்குள் அன்னமிட்டு அக்னி பகவானுக்கு நைவேத்தியம் செய்யப்படும். அதேபோல், மூன்றாவது காலச்சந்தி பூஜையின்போது, அக்னி பகவானுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டதும் அந்தணர்கள் மூவருக்குத் தீர்த்தம் கொடுக்கப்பட்ட பிறகே மூலவருக்கு நைவேத்தியம் ஆகும். பின்னர் தீர்த்தம் பெற்ற அந்தணர்கள் மூவரும் இலை போட்டு நைவேத்திய அன்னத்தைச் சாப்பிடுவர். அன்னம் மட்டுமே கோயிலில் வழங்கப்படுகிறது. குழம்பு, கூட்டு, பொரியல்களை அந்தந்த முறை அந்தணர்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்து விடுவார்கள். அந்தணர்களுக்குச் சாப்பாடு போடும் இந்த வழக்கம் திருவிதாங்கூர் மன்னர் காலத்திலிலேயே இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சிதம்பரத்தில் சம்பா சாதம்: சிதம்பரத்தில் சம்பா சாதம் நிவேதனம் செய்வது மிகவும் விசேஷம். சுத்தமான நெய்யில் மிளகு, சீரகம் வறுத்து, சாதத்தில் கலந்து சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. இதுதவிர வெண் பொங்கல், கல்கண்டு பொங்கல் போன்ற சிறப்பு நிவேதனங்களும் செய்யப்படுகின்றன. இப்படிச் செய்வதற்குப் பாவாடை என்று பெயர். சர்க்கரைப் பொங்கல் பாவாடை, வெண் பொங்கல் பாவாடை என்று சொல்லப்படுகிறது. சம்பா சாதமும் சரி, சிறப்பு நிவேதனங்களும் சரி அன்றைக்கு பூஜை முறையில இருக்கும் தீக்ஷிதர்களின் வீடுகளுக்கு மேளதாளத்துடன் கொண்டு சென்று கொடுக்கப்படும். அதேபோல் பெருமாள் திருக்கோயில்களில் காஞ்சிபுரம் பெருமாள் கோயில் குடலை இட்லி, திருக்கண்ணபுரம் பாயசம், உப்பிலியப்பன் கோயிலின் உப்பில்லாத நைவேத்தியங்கள் ஆகியவை மிகவும் பிரசித்திப்பெற்றவை, முருகன் கோயில்களிலும் பிரசாதச் சிறப்புகள் உண்டு.

ஒரு மரக்கா புட்டு... நூறு வடை: ஆவுடையார்கோயிவிலிலும் சிறப்பு நிவேதனம் நடைபெறுகிறது. தினமும் ஒரு மரக்கா புட்டு, நூறு வடை, 25 பெரிய தோசை, தேன்குழல், சொய்யம் போன்றவை நிவேதனம் செய்யப்படுகின்றன. அதேபோல் இந்தத் திருக்கோயிலில் அனுதினமும் படையல் பீடத்தில் ஆவிப்பறக்க அன்னம் பரிமாறி இறைவனுக்கு நைவேத்தியம் செய்வது சிறப்பம்சமாகும்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலையில் புட்டு, தேன்குழல், வடை, அதிரசம், தோசை போன்றவை நிவேதனமாகப் படைக்கப்படுகின்றன. ஆனால், அன்றைக்கிருந்த அளவு இல்லை. சொல்லப்போனால் சில நாள்களில் இல்லாமலும் போகிறது.

“திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இரண்டு விசேஷங்கள் மிகவும் பிரபலமானவை. ஒன்று முகுந்த சஹஸ்ரநாமம், மற்றது முசுகுந்த சஹஸ்ரநாமம். இந்த இரண்டு வைபவங்களின் போது பலவகையான உணவுவகைகள் சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன. எல்லாமே சுத்தமான நெய்யினால் சமைக்கப்படுவது”. க்காலங்களில் கோயில்களில் அமுதபடி நடைபெற்ற விவரங்கள் பல கல்வெட்டுகளில் இருந்து நமக்குத் தெரியவருகின்றன. கோயில்களில் நடைபெறும் அமுதுபடி மற்றுமுள்ள பூஜைகள், விழாக்கள் போன்றவற்றைக் கவனிக்க ஊர்தோறும் முக்கியப் பிரமுகர்கள் அடங்கிய சபை இருந்ததும் சோழர்காலக் கல்வெட்டுகளிலிருந்து தெரியவருகிறது. இவர்கள் ‘கணத்தார்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டனர்.

ஊரிலுள்ள ஐயனார் கோயில்களின் நிர்வாகத்தைக் கவனிப்பவர்களைச் ‘சாத்த கணத்தார் ’ என்றும், காளி கோயில்களை நிர்வகிப்பவர்களைக் ‘காளி கணத்தார் ’ என்றும், முருகப்பெருமான் கோயில்களை நிர்வகிப்பவர்கள் ‘குமார கணத்தார் ’ என்றும் அழைக்கப்பட்டனராம். இவர்களே கோயில்களில் இறைவனுக்குச் செய்ய வேண்டிய அமுதுபடியையும் மேற்பார்வை செய்வார்களாம்.

சிவனாருக்கு ஐந்து... சண்டிகேஸ்வரருக்கு இரண்டு!: இறைவனுக்கு அமுது படைத்தலில் இத்தனை பட்டைகள் என்று ஒரு கணக்கு உண்டு. உதாரணமாக சிவனுக்கு ஐந்து பட்டை எடுத்துச் சென்றால், அவற்றில் இரண்டை சண்டிகேஸ்வரருக்கு எடுத்துச் சென்று விடுவார்கள். அவற்றை நிர்மால்யம் என்று சொல்லி விட்டுவிடுவார்கள். மற்ற பட்டைகளைக் கோயிலில் பூஜை செய்யும் குருக்கள் மற்றும் பணியாளர்களுக்குக் கொடுப்பார்கள். எப்படியும் ஒரு வேளைக்கு 20 படி அரிசி சமைப்பார்கள். ஒரு படிக்கு ஐந்து பட்டைகள் வரும். அப்படிப் பார்த்தால் 20 படி அரிசிக்கு 100 பட்டைகள் வரும். அந்த அளவுக்குக் கோயிலில் பணியாளர்களும் இருந்தார்கள்.

சுத்த அன்னம் தவிர, பல வகையான சித்ரான்னங்களும் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. விசேஷ நாள்களிலும் திருவிழாக் காலங்களிலும் ஏழெட்டு வகையான வடைகள், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் என்று பலவகையான சித்ரான்னங்கள் என்று பல்வேறுவிதமான நிவேதனங்கள் செய்யப்பட்டன. செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது சில கோயில்களில் இந்த வழக்கம் அப்படியே தொடர்கிறது.

‘அன்னமிட்டு உண்’ என்று சொல்லிவைத்த நம் பெரியவர்கள், ‘கோயில்களில் இறைவனுக்கு அமுது செய்தபிறகு நாம் உண்ண வேண்டும்’ என்ற வழிபாட்டு நெறியைக் காட்டியதோடு, அதன் மூலம் பசிப்பிணி ஆற்றும் அறநெறியையும் அவசியமாக்கி வைத்திருக்கிறார்கள். நாமும் அந்த அறத்தை வழுவாது கடைப் பிடிப்பதுடன், அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar