பதிவு செய்த நாள்
06
நவ
2017
02:11
தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும். மெல்லினம் மென்மையும், இனிமையும் மிக்கது. மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை ஒன்றன் பின் ஒன்றாக அமைத்து உண்டான பெயர் முருகு. முருகா என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறுபொருள்களில் முருகன், குமரன், குகன், ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கவை. இதனை அருணகிரிநாதர், முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய், என்று சொல்லியிருக்கிறார். முருகா என்ற பெயரை மனதால் நினைத்தாலும், உள்ளம் உருகி சொன்னாலும் இனிமையான வாழ்வு கிடைக்கும்.