சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்களை குருசாமி என்பர். 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டி, 41 நாள் முதல் 60 நாள் வரை விரதமிருந்து, சென்று வருபவர்களே குருசாமி ஆக முடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன்மார்களுக்கு மாலை அணிவிக்கலாம். சபரிமலை சீசன் இல்லாத நாட்களிலும், ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும்.