அஷ்டமியன்று கால பைரவரை தரிசித்தால் கிரகதோஷம், எதிரி பயம், நோய் அனைத்தும் விலகி விடும். இதற்கு காரணம், பைரவருக்குள் 12 ராசிகளும் அடங்கியிருப்பதால் தான். காலத்தின் வடிவமான இவரது ஒவ்வொரு அங்கமும் ஒரு ராசியாக உள்ளது. சிவனின் நேரடி அம்சமான இவரை வணங்குவோர் அடையும் நன்மைக்கு அளவு கிடையாது. பைரவர் என்ற சொல்லுக்கு அச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர் என்பது பொருள். வைரத்தின் ஒளி பிரமிப்பு அளிப்பது போல நம் அறியாமையை போக்கி, ஞான ஒளியேற்றுபவர் என்பதால் வைரவர் என்றும் பெயர் உண்டானது.
மேஷம் – சிரசு(தலை) ரிஷபம் – வாய் மிதுனம் – கைகள் கடகம் – மார்பு சிம்மம் – வயிறு கன்னி – இடுப்பு துலாம்– பின் பக்க பிட்டம் விருச்சிகம் – பிறப்புறுப்பு தனுசு – தொடை மகரம் – முழங்கால் கும்பம் – கால்களின் கீழ்ப்பகுதி மீனம் – பாதத்தின் அடிப்பகுதி