ததீசி முனிவரைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் (அந்தணரைக் கொன்ற பாவம்) உண்டானது. இது தீர மதுரை சொக்கநாதரை வழிபட்டதால் பாவம் தீர்ந்தது. அதற்கு நன்றி செலுத்தும் விதத்தில், சொக்கநாதருக்கு விமானம் அமைத்தான். திசைக்கு இரண்டு வீதம் எட்டு யானைகள், எட்டு வீதம் 32 சிங்கங்கள், 16 வீதம் 64 பூதகணங்கள் இந்த விமானத்தை தாங்குகின்றன.