Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இங்கு இது வித்தியாசம்  இங்கு இது வித்தியாசம் திருவண்ணாமலை அஷ்ட லிங்க தரிசனம் திருவண்ணாமலை அஷ்ட லிங்க தரிசனம்
முதல் பக்கம் » துளிகள்
பெருமாள் கோயிலில் பக்தர்கள் தலையில் சடாரி வைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2017
15:38

ஒருசமயம் பகவான் மஹாவிஷ்ணு தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாத ரக்ஷைகளைத் தரையில் கழற்றி வைத்து விட்டு சற்று ஒய்வெடுக்க எண்ணி அகன்றார். பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம், மூன்றும் கர்வத்துடன் பாத ரக்ஷைகளைக் கண்டு நகைத்து, “பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் நாங்கள் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறோம். நீங்கள் பாவம் தரையில் கிடக்கிறீர்கள்! எங்களைப் போல் எந்நாளும் நீங்கள் அரியாசனத்தில் அமர முடியாது” என்று எள்ளி நகையாடின. பகவான் திரும்பி வந்ததும், பாத ரக்ஷைகள் அவரிடம் அதுபற்றி முறையிட்டன. அதைக் கேட்ட பகவான், “கவலை வேண்டாம்,  திரேதா யுகத்தில் ராமனாக நான் அவதரிக்கும் போது உங்கள் துயர் தீர்க்கப்படும். இப்போது உங்களைக் கண்டு நகைத்தவர்களையே, உங்களுக்குச் சேவை செய்ய தலைமேல் சுமக்கச் செய்வேன்!” என்றார் கருணையுடன்.

பகவான் அன்று சொன்னதைப்போல, ராமனாக திரு அவதாரம் செய்தார். பரதன் முடிசூட வேண்டி கைகேயி செய்த சதியால் ராமன் வனவாசம் சென்று விட, விஷயம் தெரிந்த பரதன், ராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான். தனது தாய் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கோருகிறான். மீண்டும் அயோத்தி திரும்பி, ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு வேண்ட ராமன் மறுத்து விடுகிறார். பிறகு, “உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் வீற்றிருக்கச் செய்து, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்” என்று வேண்ட, மனமிரங்கிய அண்ணல் ராமன் தமது பரத ரக்ஷைகளைக் கொடுத்தனுப்புகிறார்.

பகவான் மஹாவிஷ்ணுவின் அவதாரமான ராமனின் பாத ரக்ஷைகளை, சங்கு, சக்கரங்களின் அம்சமாகப் பிறந்த பரதனும் சத்ருக்னனும் தங்கள் தலைமேல் தாங்கிச் சென்று, அதை சிம்மாசனத்தில் அமர்த்தி, அதன் பிரதிநிதிகளாகவே ஆட்சி புரிந்தனர். ராம ராஜ்ஜியத்தைவிட, பரதனின் மேற்பார்வையில் நடைபெற்ற ராமனின் பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால், ராமனின் பாதுகைகள் எந்தளவு புனிதமும் சக்தியும் மிக்கது என்பதை யூகித்து அறியலாம். இதனைப் போற்றும் விதமாகவே, இன்றும் பெருமாள் கோயில்களில், சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்ட கிரீடத்தின் மீது அமர்ந்த பாதுகைகள் பக்தர்களின் தலை மீது, ‘சடாரி’ எனும் பெயரில் சாத்தப்படுகிறது. பெருமாள் தரிசனத்துக்குப் பிறகு தரப்படும் துளசித் தீர்த்தம், மஞ்சள் காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதுடன், சடாரியை சிரசில் தரித்துக் கொள்ளும்போதுதான், வழிபாடு பூர்த்தியானதாகக் கருதப்படுகிறது. காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. அதைத்தான் ‘சடாரி’ நமக்கு உணர்த்துகிறது.

 
மேலும் துளிகள் »
temple
தட்சிணாமூர்த்தி தனது இரு விரல்களை மடக்கி, மூன்று விரல்களை நீட்டிக்காட்டும் சின்முத்திரை உயர்வானது. ... மேலும்
 
temple
மதுரையை ஆண்ட பாண்டியமன்னன் பரதநாட்டியம் படித்தான். கால்வலி தாங்க முடியவில்லை. ஒருநாள் ஆடியதற்கே ... மேலும்
 
temple
சீதையை என்று ஆரம்பித்தால் கூட சீதைக்கு என்ன ஆனதோ? என்று ராமன் பயந்துபோவார் என எண்ணி, கண்டேன் சீதையை ... மேலும்
 
temple
கடுமையான தவம் செய்த முனிவர் ஒருவர் தன் வாழ்நாளின் முடிவில் விண்ணுலகம் சென்றார். அங்கே தனக்கு ... மேலும்
 
temple
மதுரையில் மீனாட்சி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.