காசி நகரின் கங்கை நதியில் குளிப்பது புனிதமானது. கங்கையில் உள்ள 64 தீர்த்த கட்டங்களில் (படித்துறை) மணிகர்ணிகா சிறப்பானது. இங்குள்ள விஸ்வநாதர் கோயில் அந்நியர்களின் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது. இப்போதுள்ள கோயில், குவாலியர் மகாராணி அகல்யாபாயால் கட்டப்பட்டது. பஞ்சாப் மன்னர் ரஞ்சித்சிங், இதற்கு தங்கக்கூரை வேய்ந்தார். காசி, மதுரா, துவாரகை, அயோத்தி, ஹரித்துவார், காஞ்சிபுரம், அவந்திகா என்னும் ஏழு முக்தி (பிறப்பற்ற நிலை) தலங்களில், காசியே முதன்மை யானது. இதனால் வாழ்வின் கடைசி காலத்தை இங்கு கழிக்க சிலர் விரும்புவர்.