* புதனுக்குரிய அதிதேவதை குபேரர். அவருக்குரிய பச்சை நிறமே, குபேரருக்கும் விருப்பமானது. பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி இலை, வெண்கடுகு போன்ற வற்றை குபேர ஹோமத்தில் இடுவர். இதில் பங்கேற்றால் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். * சம்பா அரிசி அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. * இவரது மடியில், கீரி இருக்கும். விஷ ஜந்துக்களான பாம்பு, தேளை விரட்டும் தன்மை கொண்டது. செல்வச் செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரியால் தொல்லை உண்டாவது இயல்பு. விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, எதிரி பயத்தை போக்கும் விதத்தில் கீரியை தாங்கியிருக்கிறார். * குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப் பெட்டியை வடக்கு நோக்கி வைத்தால், செல்வ வளம் பெருகும்.