சிவனின் புகழ் பாடும் நூல்கள் பன்னிரு திருமுறை. சம்பந்தரின் 4147 பாடல்கள், முதல் மூன்று திருமுறையாக உள்ளன. அப்பரின் 3066 பாடல்கள் 4,5,6ம் திருமுறைகளாகும்.
சுந்தரரின் 1026 பாடல்கள் ஏழாம் திருமுறை. மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் இரண்டும் எட்டாம் திருமுறை. இதில் பாடல்கள் 1056. திரு மாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது அடியவர்கள் பாடிய 301 பாடல்கள் ஒன்பதாம் திருமுறை.
திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறை. இறையனார், நம்பியாண்டார் நம்பி உள்ளிட்ட 12 ஆசிரியர்கள் பாடியது 11ம் திருமுறை. இதில் 1400 பாடல்கள். சேக்கிழாரின் பெரிய புராணம், 12ம் திருமுறை. இதில் 4286 பாடல்கள். 63 நாயன்மார் வரலாறு இதில் உள்ளது.