குதிரை முகம், மனித உடல் கொண்ட ஹயக்ரீவர் கல்விக் கடவுளாக விளங்குகிறார். இவருக்கு வித்யா ராஜன் என்றும் பெயருண்டு. வித்யை என்றால் கல்வி. புத்தக படிப்பு மட்டுமல்ல, புத்திக்கூர்மை, ஞாபக சக்தி, சமயோஜிதம், கலைகள் என அனைத்தும் இதில் அடங்கும். ஹயக்ரீவரை வழிபடும் பக்தரான வாதிராஜர், கடலைப்பருப்பு, வெல்லம், நெய், தேங்காய் சேர்த்து செய்த ஹயக்ரீவ பண்டி என்னும் பலகாரத்தை தாம்பாளத்தில் வைத்து தலையில் சுமந்து நிற்பார். குதிரை வடிவில் நேரில் தோன்றும் ஹயக்ரீவர், முன்னங் கால்களை வாதிராஜரின் தோள் மீது வைத்து சாப்பிடுவார். அவர் உண்ட மீதியை, வாதிராஜர் உண்டு மகிழ்வார்.