சூரியோதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்த வேளையில் (அதிகாலை4:30-–6:00 மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினை பாவம் விலகும். மாலை 4:30–-6:00க்கு இடைப்பட்ட, பிரதோஷ வேளை சிவனுக்கும், நரசிம்மருக்கும் உகந்தவை. இந்த சமயத்தில் தீபமேற்றினால் திருமண, கல்வித்தடை நீங்கும். சூரியன் மறைந்ததும், மாலை 6:30 மணிக்கு விளக்கேற்றினால், செல்வம் தங்கும்.