சிவனும் பார்வதியும் திரிசூலம் வைத்திருப்பர். இந்த ஆயுதம் இவர்களது எல்லையற்ற பேராற்றலைக் காட்டுகிறது. இது பக்தர்களை காப்பாற்றும் வகையில் செயல்படும். திரிசூலத்தின் ஒரு முனை ஆசைகளைத் ysடுவதாகவும், மறுமுனை அதை செயல்படுத்துவதாகவும், இன்னொரு முனை இந்தச் செயலைச் செய்யலாமா, என்ற ஞானத்தை தருவதாகவும் அமைந்துள்ளது. பார்வதிதேவி கையில் சூலம் வைத்திருந்தாலும், அவளது மீனாட்சி போன்ற சில அவதாரங்களில் சூலம் இல்லை. இவை அனுக்கிரக சக்தியை குறிக்கும். நமக்கு பயம் ஏற்பட்டால் ஆயுதம் ஏந்திய தெய்வங்களையும், பிற கோரிக்கைகளுக்காக அனுக்கிரக தெய்வங்களையும் வணங்கலாம் என்பது ஐதீகம்.