Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? வார்த்தையே வாழ்க்கை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பாலே அழகாகும் வீடு! ஆனந்தம் அதற்குள்ளே தேடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2018
04:03

* உள்ளத்தில் அன்பு இருந்தால் வீடும், நாடும் அழகு பெறும். அப்போது ஆனந்தத்திற்கு குறைவிருக்காது.
* ஒருவரிடமும் பகைமை பாராட்டாமல் இன்முகம் காட்டினால், அது உலகையே உங்கள் வசப்படுத்தி விடும்.
* கடமையை உணர்ந்து அதற்குரிய காலத்தில் செய்தால் உள்ளத்தில் அமைதி நிலைக்கும்.
* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என்பதே உத்தமர் இயல்பு.
* உணர்ச்சிவசப்பட்டு மனம் போன போக்கில் செயல்படுவது நல்லதல்ல. அறிவு காட்டும் வழியில் செயல்படுவதே ஆன்மிக உயர்வு தரும்.
* எண்ணம், சொல், செயல் மூன்றின் ஆற்றலுக்கும் விளைவுண்டு. இதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
* முறை தவறி செய்யும் செயலின் விளைவு, துப்பாக்கி குறி தவறி வெடிப்பது போன்றது.
* வஞ்சகர் எதிரியாய் வந்து விட்டால் வியப்பில்லை; நண்பராய் வளர்ந்தால் பெருந்தொல்லை.
* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வை கெடுக்கும்.
* ஆராய்ச்சி இல்லாத நம்பிக்கை, தாழ்ப்பாள் இல்லாத கதவு போன்றது. லட்சியம்
இல்லாத ஆராய்ச்சி, கதவு இல்லாத வீடு போல் ஆகும்.
* வாழ்த்து ஒருபோதும் வீண் ஆகாது. வாழ்த்து சொல்ல, சொல்ல உடலும், மனமும் நன்றாக இருக்கும். நம்மை சுற்றிலும் நல்ல அலை இருந்து கொண்டே இருக்கும்.
* ஒழுக்கத்தின் மூலமே வாழ்வில் உயர்வடைய முடியும். இந்த ஒழுக்கத்தை பாதுகாக் கும் கவசமே திருமணம்.
* பகைமையை வைத்து கொண்டு வாழ்த்த முடியாது. வாழ்த்தும் போது பகைமை இருக்காது.
* தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் இல்லை. தீர்க்கும் வழியை தீர்க்கமாக
அறியாதவர்களே இருக்கிறார்கள்.
* கோபத்தால் யாரையும் திருத்த முடியாது. ஒருவேளை அவர் நமக்கு பயந்து
கொண்டிருக்கலாம். ஆனால் திருந்தியிருக்க மாட்டார்.
* எந்தசூழ்நிலையிலும் ஒருவருக்கு கோபம் வரவில்லை என்றால், அவர் ஞானம் பெற்று விட்டார் என்று அர்த்தம்.
* விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால், அதுவே மேன்மை அடைவதற்கான வழி.  வழிகாட்டுகிறார் வேதாத்ரி மகரிஷி

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar