மாணிக்கவாசகர் திருவாசகத்தில், ""பாண்டி நாடே பழம்பதி என குறிப்பிடுகிறார். சிவனுடைய பழமையான ஊர் மதுரை என்பதாலும், அறுபத்துநான்கு திருவிளையாடல்களை சிவன் இங்கு நிகழ்த்தியதாலும் ""தென்னாடு ""பாண்டியநாடு எனப்படும் மதுரை சிவனுக்குரியதாக போற்றப்படுகிறது. மேலும் மாணிக்கவாசகர், ""எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவபெருமானே உலகம் முழுமைக்கும் அருள்புரிவதை திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ளார்.