படுக்குறதுக்கும், பஞ்சாங்கத்துக்கும் என்னய்யா சம்பந்தம்?’ என்று கேட்கிற ஆசாமிகள் கவனத்திற்கு. ஒருமுறை மனிதமுகத்துடன் இருந்த விநாயகருக்கும், சிவனுக்கும் போர் ண்டானது. இதில் சிவபெருமான் திரிசூலத்தை ஏவ, விநாயகரின் தலை அறுபட்டது. இதையறிந்த பார்வதி வருந்தினாள். அவளை சமாதானப்படுத்த சிவன், வடக்கு நோக்கி யார் தலை வைத்து படுத்திருந்தாலும், அவர்களின் தலையை வெட்டி எடுத்து வர சிவகணங்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, வடக்கே தலை வைத்துப் படுத்திருந்த யானை ஒன்றின் தலையை வெட்டி எடுக்கப்பட்டு விநாயகருக்குப் பொருத்தினர். இதனடிப்படையில் வடக்கே தலை வைத்து படுப்பது கூடாது என்பர். இந்த புராணக்கதை ஒருபுறம் இருந்தாலும் இதற்கான அறிவியல் காரணம் அறிவது அவசியம்.
பூமியின் வடதுருவத்திற்கு காந்தசக்தி அதிகம். அதனால், வடக்கு நோக்கி தலை வைக்கும் போது காந்தசக்தி, நம் மூளையை தாக்குகிறது. இதனால் தூக்கம் கெடுவதோடு, நாளடைவில் மனக்குழப்பம், உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஜெயின் மதத்தினர் உயிர் துறக்க விரும்பினால், ’வடக்கிருத்தல்’ என்னும் விரதம் மேற்கொள்வர். இதற்காக வடக்கு நோக்கி அமர்ந்து பட்டினி கிடப்பர். நட்புக்கு இலக்கணமான பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கு நோக்கி அமர்ந்து உயிர் விட்டதை இலக்கியம் கூறுகிறது. இரவில் இனி வடக்கு தவிர்த்த மற்ற திசைகளில் தலை வையுங்கள். நிம்மதியாக தூக்கம் வரும்.