நீரை கங்கையாகக் கருதி குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளை சப்த தீர்த்தம் என்று சொல்வர். கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று, ‘கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்’ என்னும் ஸ்லோகத்தை சொல்லி விட்டு குளித்தால் சாதாரண குளியல் கூட புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியத்தை தரும்.