பதிவு செய்த நாள்
21
ஜன
2025
04:01
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில், 7ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழாவை ஒட்டி சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவை ஒட்டி இன்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, சேஷ வாகன புறப்பாடு, திருமஞ்சனம், சிம்ம வாகனம் புறப்பாடு, ஹம்ச வாகனம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை காலை, 8:00 மணிக்கு சூரிய பிரபை வாகனம், திருமஞ்சனம், கருட வாகனம், அனுமந்த வாகனம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை லட்சுமி நரசிங்க பெருமாள், தாயார்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.