வீரசிவாஜியின் குருநாதர் சமர்த்த ராமதாசர். ஆஞ்சநேய பக்தரான இவர் ராமனின் அவதார நிகழ்வுடன் அனுமனின் பிறப்பையும் இணைத்து விட்டார். தசரதர் பிள்ளைப்பேறுக்காக நடத்திய யாகத்தில் கிடைத்த தெய்வீகப் பாயாசத்தை தன் மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்ரை மூவருக்கும் கொடுத்தார். அதன் பயனாக ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய நால்வரும் பிறந்தனர். லட்சுமண, சத்ருக்கனின் தாயான சுமித்ரா அருந்திய பாயாசத்தில் ஒரு பங்கை வாயுதேவன் எடுத்துச் சென்று அஞ்சனாதேவிக்கு வழங்கினார். அவளும் அதைப் பருகி ராமனுக்கு ஈடான அனுமனைப் பெற்றதாக கூறுகிறார் சமர்த்த ராமதாசர்.