லட்சுமியின் வடிவமாக திருவிளக்கை கருதி, தீபலட்சுமி என போற்றுவர். விளக்கை ஏற்றும் முன் அதன் உச்சி, ஐந்து முகங்கள், தீபஸ்தம்பம் என்னும் தண்டுப்பகுதி, அடிப்பகுதி ஆகிய எட்டு இடங்களில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். அப்போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி என்னும் அஷ்டலட்சுமி தாயார்களை மனதில் நினைக்க வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி, ஐஸ்வர்யம் பெருகும்.