நாகப்பட்டினம்; நாகையில் கரை ஒதுங்கிய மியான்மர் தெப்பம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் பி.ஆர்.புரம் கடலோர பகுதியில 20 அடி அகலம்,20 அடி நீளம் கொண்ட, தெப்பம் நேற்று இரவு கரை ஒதுங்கியது. 20 பேரல்களின் மீது மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட இந்த தெப்பத்தின் மேல் பகுதியில், கோவில் கோபுரம் போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்தவர்கள் காலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தெப்பத்தை பார்வையிட்ட போலீசார் கூறுகையில், ‘மியான்மர் நாட்டில் வசதி படைத்தோர், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் அவர்களது அஸ்தியை, கோவில் போன்ற தெப்பம் அலங்காரம் செய்து கடலில் விடுவது வழக்கம். இந்த தெப்பம் அது போன்றது தான்’ என்றனர்.