காமம் என்னும் சிற்றின்பம் குறித்து காஞ்சிப்பெரியவர் சொல்வதைக் கேளுங்கள். உடல் உருவாக காமத்தை கருவியாக வைத்தார் கடவுள். ஏனெனில் மண்ணில் உடலெடுத்து பிறந்தால் மட்டுமே உயிர்களால் மோட்ச உலகத்தை அடைய முடியும். ஆனால் அங்கு யாரும் செல்வதாக தெரியவில்லை. ஏனெனில் உயிர்கள் பாவச் செயல்களில் ஈடுபடுவதே காரணம். மரத்தில் பழங்கள் நிறைய வந்தாலும், அதில் ஒரு பழத்தின் விதைதான் மீண்டும் மரமாகும் நிலையை அடைகிறது. மற்றவை வீணாகி விடுகிறது. அது போல மண்ணில் தோன்றும் உயிர்களில், ஏதோ சில மட்டுமே பாவம் செய்யாமல் பூரணநிலை அடைகின்றன. அந்த உயிரையே ’மகான்’ எனக் கொண்டாடுவர். அப்படி மகான் பிறப்பதற்கு மூலகாரணம் காமம் தான். இதனடிப்படையில் ’காமேஸ்வரன்’ என்று சிவனையும், ’காமகலா’ என்று அம்பிகையையும் அழைப்பர்.