காளை வடிவத்தில் உள்ள நந்தியை கோயிலில் பார்த்திருப்பீர்கள். கருவறைக்கு முன்புள்ள மகாமண்டப நுழைவுப் பகுதியில், வடக்கு நோக்கி இருப்பவர் அதிகார நந்தி. மனித வடிவிலுள்ள இவரை ’இரண்டாம் ஈஸ்வரன்’ என்று சொல்வர். ’சிவன் சன்னதிக்குள் நுழைவதற்கு அனுமதி வேண்டும்’ என்று இவரிடம், சொல்லி விட்டுச் செல்ல வேண்டும். சிவனைத் தரிசிக்க அனுமதிக்கும் அதிகாரி என்பதால் இவர் ’அதிகார நந்தி’ எனப்படுகிறார்.