சனீஸ்வரருக்கு மாலை 6:00 மணிக்குள் அர்ச்சனை செய்தால் பலன் சிறப்பாக இருக்கும். சனீஸ்வரர் சன்னதியில், “ நிலா போல் பிரகாசிப்பவரே! சாயாதேவிக்கும், சூரியனுக்கும் மகனாக வந்தவரே! எமதர்மனுக்கு மூத்தவரே! கடமை உணர்வின் நாயகரே! சனீஸ்வரரே! உம்மை வணங்குகிறேன்” என்று சொல்லி வணங்குங்கள். தர்மசிந்தனை, கடமை உணர்வு, வைராக்கியம் கொண்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவோருக்கு சனீஸ்வரரின் அருட்பார்வையால் நன்மை ஏற்படும்.