திருமணப் பொருத்தம் பார்க்க ஜாதகம் இல்லாதவர்கள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் முன்னிலையில் பூக்கட்டி பார்க்கலாம். நீங்கள் நினைத்த பூ கிடைத்தால், தாராளமாக திருமணத்தை முடிவு செய்யலாம். தேனி மாவட்டம் தேவதானபட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில், கதவையே அம்மனாக கருதுகின்றனர். உரிக்காத பழம், உடைக்காத தேங்காயை படைத்து, பூ கட்டி பார்க்கலாம். அம்மனின் அனுமதி கிடைத்தால் தாராளமாக திருமணம் நடத்தலாம்.