கோயில்களில் பூஜை நேரத்தில் சிலர் வீண்விஷயங்களை பேசுவதுண்டு. இது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். இந்த வீண்பேச்சு காதில் விழாமல் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் பூஜையின் போது மணிகள் ஒலிக்கப்படும். கோயில் மணி அடிக்கும் போது, அது ஊர் முழுவதும் கேட்கும். மணியோசையை கூர்ந்து கேட்டால் ’ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் ஒலிப்பதை உணர முடியும்.