ஆடிக் காற்றில் கிருமிகள் பரவும். இதை தடுக்கும்மருந்தாக ஆடிக் கஞ்சி உள்ளது. இதை தயாரிக்கும் போது சீரகம், அதிமதுரம், சின்ன வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, குன்னிவேர், உழிஞ்சை வேர், கடலாடி வேர், சீற்றாமுட்டி ஆகிய நாட்டு மருந்துகளை பொடி செய்து ஒரு துணியில் கட்டி வைப்பர். அரிசியை கஞ்சியாக வேக வைத்து, அதில் மருந்து பொடிகளை 15 நிமிடம் ஊற வைப்பர். பிறகு அம்மனுக்கு படைத்து பிரசாதமாகத் தருவர்.