அம்மன் கோயில் திருவிழாக்களில் கன்னிப்பெண்கள் முளைப்பாரி எடுப்பர். இதற்காக பூந்தொட்டியில் நவதானியங்களை விதைப்பர். விரதம் இருந்து கும்மியடித்து பாடல்கள் பாடி தண்ணீர் விடுவர். முளைவிட்ட தானியங்கள் எவ்வளவு உயரத்துக்கு வளருகிறதோ, அதைப் பொறுத்து மணவாழ்வு அமையும். திருவிழாவன்று முளைப்பாரியை சுமந்தபடி ஊர்வலமாக வந்து நீர்நிலைகளில் கரைப்பர்.