சில குழந்தைகள் விளையாட்டு புத்தியால் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. சிலர் மணிக்கணக்காக படித்தாலும் ஞாபக சக்தி இன்றி தவிப்பர். சிலர் நன்றாக படித்தாலும் தேர்வு பயத்தில் மறந்து விடுவர். இப்படி குறை எதுவானாலும் அதைப் போக்கி, படிப்பில் முன்னேற லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவும். குதிரை முகத்துடன் இருக்கும் இவரை வழிபட்டே சரஸ்வதி அனைத்து வித்தைகளையும் கற்றாள்.
குழந்தைகள் படிக்கத் தொடங்கும் முன்,
“ஞானானந்தம் மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக் ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ் மஹே!” என்னும் ஸ்லோகத்தை சொல்லிய பிறகு படிக்கச் சொல்லுங்கள். பெருமாள் கோயில்களில் ஹயக்ரீவர் சன்னதியில் கல்விக்குரிய புதன் கிழமையில் நெய் தீபம் ஏற்றுங்கள். படிப்பில் ஆர்வமும், கல்வியில் வளர்ச்சியும் ஏற்படும்.